
டென்சன் இல்லை
சிஎஸ்கே அணி 11 போட்டிகள் அடி முடித்த நிலையிலேயே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. 11 போட்டிகள் முடிந்த போது சிஎஸ்கே அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்று இருந்தது. இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.

உறுதி
இதையடுத்து சிஎஸ்கே மீதம் இருக்கும் மூன்று போட்டிகளை பெருமைக்காக ஆட வேண்டும், கெளரவத்திற்காக வெற்றிபெற வேண்டும் என்று ஆடியது. இதில் வரிசையாக 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி வென்றது உள்ளது. பிளே ஆப் வாய்ப்பு இல்லை என்றாலும் கூட சுயமரியாதைக்காக சிஎஸ்கே தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

வெற்றிகள்
அடுத்தடுத்து பெங்களூர்,கொல்கத்தா அணிகளிடம் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி தொடர் வெற்றிகள் மூலம் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளுக்கு சத்தமே இல்லாமல் ஆப்பு வைத்துள்ளது. பெங்களூர் அணியை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பை சிஎஸ்கே அதிகரித்தது.. ஆனால் அதன்பின் கொல்கத்தா அணியையும் வீழ்த்தி தொடரையே சிஎஸ்கே புரட்டி போட்டது.

புரட்டியது
ஐபிஎல் போட்டிகளில் உச்சத்தில் இருந்த கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 2 அணிகள் தற்போது கால்குலேட்டரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு முக்கியமான டாப் அணிகளை சிஎஸ்கே வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையே பிளே ஆப் செல்ல போட்டி ஏற்பட்டுள்ளது. பெங்களூரிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்து இருந்தால் பெங்களூர் எளிதாக பிளே ஆப் சென்று இருக்கும்.. தற்போது அதற்கும் சிக்கலாகி உள்ளது.

கிங் மேக்கர்
எப்போதும் கிங்காக இருக்கும் சூப்பர் கிங்ஸ் அணி.. இந்த முறை கிங் மேக்கராக மாறியுள்ளது. யாரை எல்லாம் பிளே ஆப் அனுப்பலாம் என்பதை தீர்மானிக்கும் அணியாக சிஎஸ்கே அணி மாறியுள்ளது. இன்றும் கூட பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவை சிஎஸ்கேதான் தீர்மானிக்கும். பஞ்சாப் அணி இன்று வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் போட்டியில் உயிர்ப்போடு இருக்கும் .. அதுவும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

செம
இன்று சிஎஸ்கே தோல்வி அடைந்தால் அது பெங்களூர், கொல்கத்தா , டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு சிக்கல் ஆகும்.கடைசியில் ரன் ரேட் அடிப்படையில் அணிகள் பிளே ஆப் செல்லும் நிலை ஏற்படும். இதனால் சென்னைதான் தற்போது கிங் மேக்கராக உள்ளது. பிளே ஆப் வாய்ப்பு இல்லாமலே.. பிளே ஆப் செல்ல போகும் அணியை தீர்மானிக்கும் சக்தியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications