
வாய்ப்பு இல்லை
இந்த நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்து இவர் பாதியில் வெளியேறினார். அந்த போட்டிக்கு பின் மொத்தமாக தொடரில் இருந்தே பிராவோ வெளியேறினார். இந்த நிலையில் இனி அடுத்த சீசன்தான் பிராவோ சிஎஸ்கே அணிக்காக ஆடுவார்.

உறுதி
அடுத்த சீசனில் பிராவோ கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்காக களமிறங்குவார். அணியில் அடுத்த வருடம் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கும். வாட்சன், ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்கள் விரைவில் எடுக்கப்படுவார்கள்.

எப்படி
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் பிராவோவிற்கு அணியின் ரசிகர்கள் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதன்படி சிஎஸ்கே அணிக்கு மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த அல்லது சிபிஎல் போட்டிகளில் ஆட கூடிய வீரர் ஒருவரை பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட கூடிய வீரரை பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கை
மும்பை அணிக்கு பிராவோதான் பொல்லார்டை பரிந்துரை செய்தார். தற்போது மும்பை அணிக்கு மிக முக்கியமான வீரராக பொல்லார்ட் உருவெடுத்து இருக்கிறார். அணியின் கேப்டனாகவும், பவுலராகவும் சிறப்பாக பொல்லார்ட் செயல்பட்டு வருகிறார். அதே மாதிரி திறமையான வீரர் ஒருவரை பிராவோ பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

டெத் ஓவர்
டெத் ஓவர்களில் அடிக்க கூடிய கரிபியன் வீரர்தான் தற்போது சிஎஸ்கே அணியில் குறைவாக இருக்கிறார். ரசல், பொல்லார்ட், கெயில் போன்ற வீரர்கள் மற்ற அணியில் கலக்கும் போது சிஎஸ்கே அணியில் அப்படி யாரும் இல்லை. கரிபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பல இளம் வீரர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள். அவர்களில் ஒருவரை பரிந்துரை செய்ய வேண்டும் என்று பிராவோவிற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications