Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து நடந்த 3 திருப்பம்.. தோனிக்கு சாதகமான சூழ்நிலை.. சிஎஸ்கே போடும் கணக்கு.. என்ன நடக்குமோ!

துபாய்: சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் இன்று மும்பையை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், முக்கியமான பல விஷயங்கள் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக மாறியுள்ளது.

சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் சிஎஸ்கே கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இன்னும் 4 போட்டிகளில் ஆட வேண்டும். 4 போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றிபெற்றால் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு கொஞ்சம் கை கூடி வந்துள்ளது. அடுத்தடுத்து நடந்த மூன்று திருப்பங்கள் சிஎஸ்கேவிற்கு ஆதரவாக இருக்கிறது. முதல் விஷயம் என்று பார்த்தால் கொல்கத்தா பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்தது. அதிலும் மிக மோசமான ரன் ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.

வேறு என்ன

வேறு என்ன

இதனால் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தற்போது கொல்கத்தா 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வென்றுள்ளது. ஆனால் மோசமான ரன் ரேட் கொண்டு இருக்கிறது. இதனால் இனி வரும் போட்டிகளில் கொல்கத்தா தோல்வி அடைந்தால் அந்த அணி பிளே ஆப் வாய்ப்பை கூட இழக்க வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் அந்த அணியில் நரேன், ரசல் ஆட முடியாத நிலையில் இருப்பதால், கொல்கத்தா தோல்வியை எதிர்நோக்கி உள்ளது.

தோல்வி

தோல்வி

ஒரு பக்கம் இப்படி இருக்க நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத்திடம் தோல்வி அடைந்தது. இதனால் புள்ளிகள் பட்டியலில் மூன்று அணிகள் தலா எட்டு புள்ளியுடன் களத்தில் உள்ளது. பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் என்று மூன்று அணிகளும் 8 புள்ளிகளுடன் களத்தில் உள்ளது. சிஎஸ்கே இன்று வெற்றிபெற்றால் சிஎஸ்கே அணியும் 8 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கான ரேஸில் சேரும்.

4வது

4வது

இதனால் இன்று நடக்கும் மும்பைக்கு எதிரான போட்டியில் வென்று சிஎஸ்கே தன்னை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இன்று சிஎஸ்கே வென்றால் அது அணிக்கு ஆதரவாக மாறும். இங்குதான் மூன்றாவது விஷயம் தற்போது சிஎஸ்கேவிற்கு ஆதரவாக மாறியுள்ளது. அதன்படி இன்று மும்பை அணியில் முக்கியமான சில வீரர்கள் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

மும்பை மாற்றம்

மும்பை மாற்றம்

சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் மும்பை அணியில் முக்கியமான சில வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் மும்பை அணியில் இன்று நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமயத்தில் ரோஹித் சர்மாவே ஆடாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு இன்று வெற்றி வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, October 23, 2020, 10:00 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+