Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உயர்ந்து நின்ற தோனி.. 3 வருட கனவை நிறைவேற்றும் சிஎஸ்கே வீரர்.. அணிக்குள் மாற்றம்.. இதுதான் காரணம்!

துபாய்: பெங்களூருக்கு எதிராக இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் மோனு குமார், மிட்சல் சான்டனர் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம் நடக்க உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை இழந்து உள்ள சிஎஸ்கே அணி இன்று பெங்களூரை எதிர்கொள்கிறது.

பெங்களூர் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல ஆர்வமாக இருக்கிறது. இதனால் இன்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூர் உள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் மீண்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேசிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. முதலில் பீல்டிங் செய்யும் அணி கடுமையான வெயிலில் ஆட வேண்டும் என்பதால் இன்று சிஎஸ்கே அணி டாஸ் தோல்வி அடைந்தது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே எப்படி

இன்றுக்கு ஆடும் சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியிலேயே சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். ஜெகதீசன், ரூத்துராஜ் அணிக்குள் வந்தனர். இந்த நிலையில் இன்றும் அணிக்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

அதன்படி இன்று நடக்கும் போட்டியில் மோனு குமார், மிட்சல் சான்ட்னர் அணிக்குள் வருகிறார்கள். மிட்சல் சான்ட்னர் நன்றாக பேட்டிங் செய்ய கூடியவர். அதேபோல் இவர் நன்றாக பௌலிங்கும் செய்வார். இந்த நிலையில் இன்று சான்ட்னர் அணிக்குள் வருகிறார். ஹசல்வுட் நீக்கப்பட்டு சான்ட்னர் அணிக்குள் வருகிறார்.

மோனு குமார்

மோனு குமார்

ராஞ்சியை சேர்ந்த மோனு குமார் வலது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் இன்று ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அணிக்குள் வந்துள்ளார். மோனு குமார் 2018ல் இருந்து சிஎஸ்கேவில் இருக்கிறார். இவர் நெட்டில் மட்டுமே பவுலிங் செய்து வந்தார். இந்த நிலையில் இத்தனை வருடங்கள் கழித்து மோனு குமார் இன்று அணிக்குள் வந்துள்ளார்.

சிறப்பு

சிறப்பு

கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதனால் அவர்களை தோனி நீக்குவாரா என்று கேள்வி எழுந்தது. ஆனால் கடந்த போட்டியில் ஆடியதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்துள்ளார். தோனியின் செயலை பலரும் பாராட்டி உள்ளனர்.

Story first published: Sunday, October 25, 2020, 18:29 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+