Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று நடந்த அந்த ஒரு சம்பவம்.. முக்கிய மீனுக்கு தூண்டில்.. பெரிய தியாகம் செய்ய துணிந்த சிஎஸ்கே அணி!

துபாய்: சிஎஸ்கே அணி தற்போது பெரிய மீன் ஒன்றுக்கு அடுத்த சீசனில் தூண்டில் போட முடிவு செய்துள்ளது. இந்த சீசனை மிக கவனமாக உற்றுநோக்கி வரும் சிஎஸ்கே அடுத்த சீசனுக்கான பெரிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற அணிகள் இந்த முறை கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பு இருக்கும் அணிகளாக உருவெடுத்து உள்ளது. சிஎஸ்கே அணிக்கு இந்த தொடர் பெரிய பாடமாக மாறியுள்ளது.

இந்த தொடரில் சிஎஸ்கே பிளே ஆப் செல்ல சின்ன வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்த சீசனுக்கு பின் சிஎஸ்கே அணிக்குள் பெரிய மாற்றங்கள் வரும் என்று கூறுகிறார்கள்.

மாற்றம் என்ன

மாற்றம் என்ன

சிஎஸ்கே அணியில் தற்போது இருக்கும் பெரும்பாலான வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. முக்கியமான சில வீரர்கள் இனி ஐபிஎல் போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை. சிஎஸ்கேவில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் இந்த சீசனோடு ஓய்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தியாகம்

தியாகம்

இதனால் சிஎஸ்கே மொத்தமாக பல புதிய வீரர்களை அடுத்த சீசனில் எடுக்கும் என்கிறார்கள்.அதன்படி அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி முக்கியமான வீரர்களை தியாகம் செய்யும் என்கிறார்கள். வாட்சன், ஜாதவ், பிராவோ, டு பிளசிஸ் ஆகியோர் சிஎஸ்கே அணி நிர்வாகம் தியாகம் செய்யும் என்று கூறுகிறார்கள்.

அடுத்த சீசன்

அடுத்த சீசன்

அவர்களுக்கு பதிலாக அணிக்குள் புதிய ஒப்பனர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் வருவார்கள். பிராவோவின் இடத்தை வேறு மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் நிரப்ப வாய்ப்புள்ளது. வாட்சன், டு பிளசிஸ் போன்றவர்களை நீக்கிவிட்டு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளில் இருக்கும் வீரர்களை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டு இருக்கிறது.

யார்

யார்

முக்கியமான நியூசிலாந்து வீரர்களை அணிக்குள் அதிகம் கொண்டு வர சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. அணியின் கேப்டனாக தோனியும், பயிற்சியாளராக பிளமிங்கும் நீடிப்பார்கள். இன்னொரு பெரிய மீன் ஒன்றுக்கு தூண்டில் போட சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் வருகிறது.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். தோனி கேப்டனாகவும், கேன் வில்லியம்சன் வருங்கால கேப்டனாகவும் இருக்கும் வகையில் சிஎஸ்கே திட்டமிடுகிறது என்கிறார்கள்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

ஹைதாராபாத் அணியில் கேன் வில்லியம்சனுக்கு நிறைய மாற்று வீரர்கள் உள்ளனர் . நபி, ஹோல்டர் என்று முக்கிய வீரர்கள் பெஞ்சில் உள்ளனர். நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹோல்டர் ஆடினார். ஆனாலும் ஹைதராபாத் அணி வென்றது. இந்த சம்பவம் சிஎஸ்கேவிற்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.

வருவார்

வருவார்

இதனால் கேன் வில்லியம்சனை கொல்கத்தா அணி ரீ-டெயின் செய்யாது என்று கூறுகிறார்கள். இதற்கு பதிலாக வார்னர் கேப்டனாக தொடர்வார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த சீசனில் கேன் வில்லியம்சன் சிஎஸ்கே வரும் என்கிறார்கள்.

ரெய்னா எப்படி

ரெய்னா எப்படி

இன்னொரு பக்கம் அணிக்குள் அடுத்த வருடம் மீண்டும் ரெய்னா திரும்பி வர வாய்ப்புள்ளது. அதோடு பல முக்கிய வீரர்களை அடுத்த வருடம் எடுப்பதற்கு வசதியாக இந்த சீசன் முடிவில் பலரை சிஎஸ்கே இழக்க துணிந்துவிட்டது. பலரை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்துவிட்டது என்கிறார்கள்.

Story first published: Friday, October 23, 2020, 10:40 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+