Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வீரர்களுக்கும் குறி.. மும்பை இந்தியன்ஸுக்கு செக் வைக்கும் தோனி.. ஆடிப் போகும் ரோஹித்.. பின்னணி

துபாய்: அடுத்த வருட ஐபிஎல் சீசனில் இரண்டு முக்கியமான மும்பை வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி தோல்வியுடன் முடித்துள்ளது. எப்போதும் பிளே ஆப் செல்லும் சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

மூத்த வீரர்களின் பார்ம் அவுட் காரணமாக சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்துள்ளது.

தோல்வி

தோல்வி

இந்த நிலையில் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அணியில் இருந்து வாட்சன் வெளியேறிவிட்டார். அதேபோல் ஹர்பஜன், கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் அணியில் நீடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள்.

ஏலம் எடுக்க வாய்ப்பு

ஏலம் எடுக்க வாய்ப்பு

இதனால் அடுத்த வருட ஐபிஎல் சீசனில் இரண்டு முக்கியமான மும்பை வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இரண்டு ஓப்பனிங் வீரர்களை சிஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மும்பை அணி இவர்களை ரீ -டெயின் செய்ய வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

ரீ -டெயின்

ரீ -டெயின்

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரூ அணியும் ஐந்து வீரர்களை தக்க வைக்க முடியும். ரீ -டெயின் விதியை பயன்படுத்தி 5 வீரர்களை மும்பை அணி தக்க வைக்க உள்ளது. அதன்படி ஹர்திக் பாண்டியா, ரோஹித், பொல்லார்ட், பும்ரா, சூர்ய குமார் யாதவ் ஆகிய 5 பேரை மும்பை அணி தக்க வைக்கும் என்று கூறுகிறார்கள்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

இதனால் மும்பை அணியில் மீதம் இருக்கும் இஷான் கிஷான் மற்றும் கிறிஸ் லைன் ஆகிய இரண்டு பேரையும் சிஎஸ்கே ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இஷான் கிஷான் நன்றாக ஆடினாலும் அடுத்த வருடம் மும்பை அணி இவரை ரீ டெயின் பண்ண வாய்ப்பு இல்லை. இதனால் சிஎஸ்கே அணி மிடில் ஆர்டர் வீரராக இஷான் கிஷானை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது.

கிறிஸ் லைன்

கிறிஸ் லைன்

அதேபோல் கிறிஸ் லைனை அணியில் எடுக்கவும் சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. இவரை மும்பை அணியில் இந்த வருடம் பயன்படுத்தவில்லை. இதனால் அடுத்த வருடம் கிறிஸ் லைனை சிஎஸ்கே அணியில் எடுத்து ஓப்பனிங் வீரராக இவரை களமிறக்க தோனி திட்டமிட்டு வருகிறார் என்று தகவல்கள் வருகிறது.

Story first published: Sunday, November 8, 2020, 15:41 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+