அவர் வேண்டாம்.. முக்கிய வீரரை கடைசி நொடியில் உட்கார வைத்த தோனி..அடுத்த போட்டிக்கும் நோ சொன்ன சிஎஸ்கே
அபுதாபி: நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னையின் முக்கியமான வீரர் ஒருவர் அணியில் ஆடவில்லை. இந்த நிலையில் சென்னையின் அடுத்த போட்டியிலும் இதே பிளேயிங் லெவன்தான் ஆட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
நேற்று சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. சென்னை அணி இதில் அதிரடியாக ஆடி மும்பையை வீழ்த்தியது.
இதில் சென்னை அணியின் ஆடும் லெவலின் முரளி விஜய் , ஷேன் வாட்சன், டு பிளசிஸ் , அம்பதி ராயுடு, கெதர் ஜாதவ், தோனி, ஜடேஜா,சாம் குரன், தீபக் சாகர், பியூஸ் சாவ்லா, லுங்கி நிகிடி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

ஏன் இப்படி
சென்னை அணியின் இந்த ஆடும் லெவன் கடைசி கட்டத்தில்தான முடிவு செய்யப்பட்டது என்கிறார்கள். பொதுவாக சென்னையில் ஆடும் லெவன் வீரர்கள் 2 நாளுக்கு முன் தேர்வு செய்யப்படுவார்கள். அல்லது ஒரே நாளுக்கு முன் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் போட்டிக்கு தயார் செய்யப்படுவார்கள்.

ஆனால் என்ன
ஆனால் சென்னை அணியில் நேற்று பிளேயிங் லெவன் கடைசி கட்டத்தில்தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கடைசி கட்டத்தில்தான் அணியில் சாம் கரன் இணைந்து இருக்கிறார். பிராவோ விளையாட வேண்டிய இடத்தில் சாம் கரன் விளையாடி இருக்கிறார். பிராவோ இந்த போட்டியில் விளையாட வேண்டாம் என்பதில் தோனி உறுதியாக இருந்துள்ளார்

ஏன் ஏன் இப்படி
vபிராவோ டெத் ஓவர்களில் நன்றாக வீச கூடியவர். கடைசி கட்டத்தில் நன்றாக பேட்டிங்கும் செய்வார். ஆனால் நேற்று போட்டி நடந்த பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பிட்ச். இதில் பிராவோ பவுலிங் எடுபடாது. இதனால் பிராவோவை எடுத்து பலனை இல்லை என்று உட்கார வைத்துள்ளனர். அதோடு பிராவோ இப்போது பார்மில் இல்லை.

பார்ம் பார்ம் இல்லை
சிபிஎல் தொடரில் பிராவோ சரியாக விளையாடவில்லை. இந்த தொடரில் அவர் அதிகம் சொதப்பினார். பெரிய அளவில் பேட்டிங், பவுலிங் எதுவும் செய்யவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் அவரை எடுக்க வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது. அதோடு இவரின் காலிலும் அடிபட்டு இருந்தது. இதனால் அவர் விளையாடுவது கடைசி நேரத்தில் தடைபட்டது.

விளையாட மாட்டார் இன்னொரு சிக்கல்
இந்த நிலையில்தான் பிராவோ அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என்று உறுதியாகி உள்ளது. இவர் அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று உறுதியாக கூறுகிறார்கள். இவருக்கு கால் இன்னும் சரியாகவில்லை. இன்னொரு பக்கம் சாம் கரன் ஸ்பின் பவுலிங்கோடு சேர்த்து பேட்டிங்கும் நன்றாக செய்கிறார். அதனால் கண்டிப்பாக பிராவோ அடுத்த போட்டியில் இருக்க மாட்டார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications