Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலியே சொல்லி விட்டார்.. தோனி திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது.. சிஎஸ்கேவிற்கு கடைசியாக நல்ல காலம்

துபாய்: சிஎஸ்கே அணியில் தோனி திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடக்க போகிறது. அடுத்த வருட ஐபிஎல் சீசனுக்காக தோனி வகுத்த திட்டங்கள் செயலுக்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது.

2020 ஐபிஎல் சீசன் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு போட்டிகளில் இந்த சீஸனின் வின்னர் யார் என்று தெரிந்துவிடும்.

ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 14 போட்டிகளில் 6 போட்டியில் மட்டுமே வென்ற சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

அடுத்த சீசன்

அடுத்த சீசன்

இதனால் சிஎஸ்கே அணி தற்போது அடுத்த சீசனுக்கு தயாராகி வருகிறது. அடுத்த சீசனில் சிறப்பான வீரர்களுடன் களமிறங்க சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. வாட்சன் அணியில் இல்லை , அதேபோல் இன்னும் பல வீரர்கள் ஓய்வு பெற உள்ளனர் என்பதால் சிஎஸ்கே அணி புதிய வீரர்களுடன் களமிறங்க உள்ளது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இதற்காக சிஎஸ்கே அணி.. வருகின்ற ஏலத்தில் முக்கியமான வீரர்களை அணியில் எடுக்க இருக்கிறது. பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஏலத்தில் பெரிய அளவில் வீரர்களை எடுக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஏலம் நடக்குமா என்று கேள்விகள் எழுந்தது.

ஏலம் நடக்குமா?

ஏலம் நடக்குமா?

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் கண்டிப்பாக ஏலம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. பெரிய அளவில் ஏலம் நடக்கவில்லை என்றாலும் கூட முக்கியமான வீரர்கள் பலர் இன்னும் 3 மாதங்களில் ஏலம் விடப்படுவார்கள். அதேபோல் ஐபிஎல் தொடரும் ஏப்ரல் - மே மாதம் நடக்க உள்ளது.

உறுதி

உறுதி

ஏப்ரல் -மே மாதம் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடக்கும் என்று கங்குலி உறுதியாக அறிவித்து விட்டார். இதனால் தோனி திட்டமிட்டபடி இன்னும் சில மாதங்களில் மீண்டும் களமிறங்க உள்ளார். கடந்த போட்டியில் பேட்டி அளித்த தோனி... இன்னும் சில மாதங்களில் அடுத்த ஐபிஎல் சீசன் நடக்க உள்ளது. அதனால் நான் கண்டிப்பாக ஓய்வு பெற போவதில்லை, என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார் .

திட்டப்படி நடக்கும்

திட்டப்படி நடக்கும்

தற்போது தோனியின் திட்டப்படி இன்னும் 6 மாதங்களில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. இதனால் அவர் முறையாக பயிற்சி செய்து மீண்டும் பார்மிற்கு திரும்ப வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி பிப்ரவரியில் ஏலம் எடுத்துவிட்டு.. ஏப்ரல் - மே மாதத்தில் மீண்டும் புத்துணர்ச்சியோடு களமிறங்க வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

Story first published: Sunday, November 8, 2020, 17:46 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+