Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமிற்காக நின்றார்.. அவரை சிஎஸ்கே கேப்டனாக போடுங்கள்.. புது சகாப்தமே தொடங்கும்.. அதிரடி கோரிக்கை!

துபாய்: சிஎஸ்கே அணியின் வருங்கால கேப்டன் யார் என்பதற்கான கோரிக்கைகள், விவாதங்கள் இப்போதே நடக்க தொடங்கி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமாக ஆடி உள்ளது. மொத்தமாக 11 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது.

இதனால் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு கையைவிட்டு நழுவி போய் உள்ளது. இனி அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்கு தயார் ஆகும் முடிவை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

சிஎஸ்கே அணி எப்படி

சிஎஸ்கே அணி எப்படி

இது தொடர்பாக தோனி கொடுத்த பேட்டியில், அடுத்த வருட சீசனுக்கு நாங்கள் தயாராக வேண்டும். அடுத்த வருடம் குறித்த தெளிவான பார்வை எங்களுக்கு இருக்க வேண்டும். எப்படி ஏலம் நடக்கும் என்பதை கவனிக்க வேண்டும். எங்கே தொடர் நடக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் வாய்ப்பு

இளைஞர்கள் வாய்ப்பு

அதேபோல் இளைஞர்களுக்கு விளையாடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். அவர்களின் திறமையை வெளியே கொண்டு வரும் வகையில் செயல்பட வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். அதாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே முக்கியம் என்பதை தோனி உணர்ந்து கொண்டு இருக்கிறார். அடுத்த ஏலத்தில் இதனால் சிஎஸ்கே பல இளம் வீரர்களை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது.

கேப்டன் இல்லை

கேப்டன் இல்லை

அதேபோல் சிஎஸ்கே அணிக்குள் புதிய கேப்டனை எடுக்காமல், இருக்கிற வீரரை கேப்டனாக பயிற்சி கொடுக்க உள்ளனர் என்றும் கூறுகிறார்கள். பாண்டிங் எப்படி கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிற்கு கொடுத்து அவரை முன்னேற வைத்தாரோ அதேபோல் சிஎஸ்கே அணியும் புதிய கேப்டனை அணிக்குள் உருவாக்க உள்ளது என்கிறார்கள்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஷேன் வார்னேவும் 2008ல் ராஜஸ்தான் அணியை இதேபோல் வழி நடத்தினார். அணி முழுக்க இளம் வீரர்களை வைத்துக்கொண்டு கேப்டன்சி பொறுப்பை மட்டுமே வார்னே பார்த்துக் கொண்டார். 2008ல் இதனால் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றது. இதேபோல் தோனியும் அணியில் புதிய இளம் வீரர்களை முழுக்க முழுக்க எடுத்து அவர்களை வழி நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

ஒருவர்

ஒருவர்

அதில் ரோஹித் சர்மா போல ஒரு திறமையான இளம் வீரரை கண்டுபிடித்து அவரை தனக்கு பின் கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் சிலர் அடுத்த வருடம் தோனி கேப்டனாக இருக்க வேண்டும். அதே சமயம் அவர் சாம் கரனை கேப்டன்சிக்கு தயார் செய்ய வேண்டும். அவர்தான் இளைஞர். தோனியிடம் ஒரு காலத்தில் இருந்த ஸ்பார்க் கரனிடம் இருக்கிறது.

செம

செம

சாம் கரனை அணியின் கேப்டனாக தேர்வு செய்ய கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி அளிக்க வேண்டும். 2022ல் இவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. 2020ல் இவருக்கு அனுபவமும் அதிகரித்து விடும். அணியுடன் செட்டாகி விடுவார்.

நேற்று

நேற்று

அணிக்காக நேற்று சாம் கரன் போராடியதை பார்த்த எல்லோருக்கும் தெரியும். அவர் கண்ணில் ஒரு நெறுப்பு இருந்தது. இவருக்கு சரியான வாய்ப்பு கொடுத்தால் சிஎஸ்கே புதிய எழுச்சி பெறும், புதிய சகாப்தமே தொடங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கூற தொடங்கி உள்ளனர்.

Story first published: Saturday, October 24, 2020, 13:59 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+