For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னையில் இருந்தார்.. பாவம் அவரும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டார்.. ரூத்துராஜ் பற்றி தோனி உருக்கம்!

துபாய்: நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ரூத்துராஜ் ஆடிய அதிரடி ஆட்டம் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்துள்ளார்.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது. வரிசையாக தோல்வி அடைந்து வந்த சிஎஸ்கே நேற்று ரூத்துராஜ் அதிரடியால் வெற்றிபெற்றது.

நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 145 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சிஎஸ்கே அணியில் ஒப்பனர் ரூத்துராஜ் அதிரடியாக 65 ரன்கள் எடுத்தார். இதனால் சிஎஸ்கே 18.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து வென்றது.

தோனி

தோனி

பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ரூத்துராஜ் ஆடிய அதிரடி ஆட்டம் குறித்து கேப்டன் தோனி பேட்டி அளித்துள்ளார். அதில், இது ஒரு முழுமையான போட்டியாக இருந்தது. எல்லாம் நாங்கள் திட்டமிட்டப்படி நடந்தது. எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடிந்தது. போதுமான இடைவெளியில் எங்களால் விக்கெட் எடுக்க முடிந்தது. இதனால் எதிர்பார்த்ததை விட குறைவான ரன்களில் பெங்களூர் அணியை சுருட்ட முடிந்தது.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. இந்த பிட்ச் ஸ்லோ பிட்ச். இதில் நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினோம். ஆனால் ஸ்பின் பவுலர்கள் நேற்று நன்றாக பவுலிங் செய்தனர். டெத் ஓவர்களில் இதுவரை சிஎஸ்கே சரியாக ஆடாததுதான் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் இந்த தொடரில் அவ்வளவு சிறப்பாக இல்லை.

ஓப்பனிங்

ஓப்பனிங்

ஆனால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் சிறப்பாக இருந்தது. ரூத்து நன்றாக ஓப்பனிங் செய்தார். அவர் சிறப்பாக ஆடினார். அவர் பெரிய ஷாட்களை அடிப்பதை விட தனக்கு பிடித்த ஷாட்களை அடிக்க முயன்றார். அது அவருக்கு கை கொடுத்தது.இது போன்ற சமயங்களில் சிரிக்க வேண்டும். அதுதான் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்.

பிளே ஆப்

பிளே ஆப்

நாங்கள் பிளே ஆப் செல்ல போவது இல்லை. இனி வரும் போட்டிகளை என்ஜாய் செய்து அனுபவித்து ஆட முடியும். மைதானத்திற்கு சென்று டென்ஷன் இல்லாமல் ஆடுங்கள் என்று வீரர்களிடம் சொல்ல முடியும். சிஎஸ்கே வீரர்கள் தங்களால் முடிந்ததை செய்தார்கள். ரூத்துராஜ் இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியில் இப்படி ஆடி இருந்தால் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருப்போம். எங்களுக்கும் கொஞ்சம் அவரை பற்றி தெரிந்திருக்கும்.

எப்படி ஆடினார்

எப்படி ஆடினார்

ரூத்துராஜுக்கு இந்த வருடம் மிக மோசமாக இருந்தது. அவர் சென்னையில் இருந்தார். அதன்பின் இங்கே வந்தவுடன் கொரோனா வந்தது. கூடுதலாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் அவர் சரியாக ஆட முடியவில்லை.

நம்பிக்கை உதவியது

நம்பிக்கை உதவியது

நீங்கள்தான் உங்களுக்கு எதிரான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். ரூத்துராஜ் அதை சிறப்பாக செய்தார். முதல் சிங்கிள் எடுத்த பின் ரூத்துராஜ் சிறப்பாக பேட்டிங் செய்தார். போட்டியில் போக போக அவர் நம்பிக்கை பெற்றார். அந்த நம்பிக்கைதான் அவருக்கு இந்த போட்டியில் உதவியது, என்று தோனி குறிப்பிட்டு உள்ளார்.

Story first published: Monday, October 26, 2020, 10:03 [IST]
Other articles published on Oct 26, 2020
English summary
IPL 2020: CSK skipper Dhoni talks about Ruturaj batting against RCB.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+