Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சில விஷயங்கள் இதயத்தை உடைத்து இருக்கிறது.. போராட வேண்டும்.. சிஎஸ்கே தோல்வி.. சாக்சி உருக்கமான கடிதம்

துபாய்: சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது குறித்து கேப்டன் தோனியின் மனைவி சாக்சி உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. முதல் முறையாக 10 வருட ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த சீசனில் மிக மோசமான ஆட்டம் காரணம் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த தோல்வி மனரீதியாக கேப்டன் தோனியையும் பாதித்து உள்ளது.

கருத்து

கருத்து

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனியின் மனைவி சாக்சி உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது வெறும் விளையாட்டுதான்.. நீங்கள் சில போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள்.. சில போட்டிகளில் தோல்வி அடைவீர்கள். கடந்த சில வருடங்களாக பெரிய திரில்லிங் வெற்றிகளை பெற்று இருக்கிறோம், சில மோசமான தோல்விகளையும் சுவைத்து இருக்கிறோம்.

இதயம்

இதயம்

சில விஷயங்களை கொண்டாடி இருக்கிறோம், சில விஷயங்கள் இதயத்தை உடைத்து இருக்கிறது. சிலர் வெற்றிபெறுவார்கள், சில தோல்வி அடைவார்கள், சிலர் தவற விடுவார்கள்,.. இது வெறும் விளையாட்டுதான். நிறைய கருத்துக்களும், அறிவுரைகளும் வருகின்றன.

உணர்ச்சி வேண்டாம்

உணர்ச்சி வேண்டாம்

ஸ்போர்ஸ்மேன்சிப்பை மதிக்க வேண்டும். இதுவிளையாட்டு என்பதை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேச கூடாது. இது வெறும் விளையாட்டுதான். யாரும் இதில் தோல்வி அடைய விரும்ப மாட்டார்கள். அதே சமயம் ஒரே சமயத்தில் எல்லோருமே வெற்றியும் பெற முடியாது.

வலி

வலி

நீங்கள் போட்டியில் தோல்வி அடைந்து, அதிர்ச்சி அடைந்து விரக்தியோடு வெளியேறும் போது பெவிலியன் மிகவும் தூரமாக இருப்பது போல தெரியும். மைதானத்தில் இருக்கும் சத்தம் நமக்கு இன்னும் வலியை கூட்டும். மனதிடம்தான் நம்மை கட்டுப்படுத்தும். இது வெறும் விளையாட்டுதான்.

போராளிகள்

போராளிகள்

நீங்கள் முன்பு வெற்றியாளராக இருந்தீர்கள்.. நீங்கள் இப்போது மீண்டும் வெற்றியாளராக உள்ளீர்கள். உண்மையான போராளிகள் எப்போதும் போராடுவார்கள் .அவர்கள் பிறந்ததே போராடாத்தான். எங்கள் இதயத்திலும், மனதிலும் எப்போதும் நீங்கள் சூப்பர் கிங்காக இருப்பீர்கள், என்று சாக்சி மிகவும் உருக்கமாக டிவிட் செய்துள்ளார்.

Story first published: Monday, October 26, 2020, 10:00 [IST]
Other articles published on Oct 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+