Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இத்தனை பார்வையாளர்களா!! சிஎஸ்கே vs மும்பை போட்டி.. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை!

டெல்லி: மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டி இந்திய கிரிக்கெட் மற்றும் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு இடையே ஐபிஎல் 2020 தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 8 மாதங்களாக பெரிய அளவில் கிரிக்கெட் தொடர்கள் நடக்காத நிலையில், தற்போது ஐபிஎல் தொடர் தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை 162 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை 165 ரன்கள் எடுத்து வென்றது.

கூட்டம் இல்லை

கூட்டம் இல்லை

இந்த ஐபிஎல் போட்டி மக்கள் கூட்டம் இன்றி நடந்தது. கொரோனா காரணமாக இந்த ஐபிஎல் தொடர் முழுக்கவே மக்கள் கூட்டம் இன்றிதான் நடக்கிறது. ஆனால் ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மூலம் பெரிய அளவில் வருவாய் கிடையாது. 5%க்கும் குறைவான வருவாயே டிக்கெட் மூலம் கிடைக்கிறது. இதனால், ரசிகர்கள் இன்றி ஐபிஎல் நடத்தினாலும், பெரிய இழப்பு வராது என்று கூறப்பட்டது.

சாதனை

சாதனை

அந்த சிறிய இழப்பு கூட தொலைக்காட்சியில் அதிக பேர் பார்க்கும் போது ஈடுகட்டப்படும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது . இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனையை ஐபிஎல் தொடரின் முதல் போட்டி படைத்து இருக்கிறது.

 எத்தனை பேர்

எத்தனை பேர்

இதில் மொத்தம் 20 கோடி பேர் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் நிகழ்ச்சியை பார்த்து உள்ளனர். இந்தியாவில் ஒரே நிகழ்ச்சியை இப்படி யாரும் ஒரே நேரத்தில் பார்த்தது இல்லை. இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஆன்லைன் மற்றும் டிவியில் இவ்வளவு பார்வையாளர்கள் இருந்தது இல்லை.

இதுதான் அதிகம்

இதுதான் அதிகம்

இந்திய வரலாற்றில் தனிப்பட்ட ஒரு கிரிக்கெட் போட்டிக்கு இதுதான் அதிகபட்ச ஒரே நாள் டிஆர்பி என்று BARC எனப்படும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது. இதை பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா ஷேர் செய்து சந்தோஷப்பட்டு இருக்கிறார். தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் இரண்டிலும் மக்கள் இதை பார்த்து உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார் .

உறுதி செய்துள்ளது

உறுதி செய்துள்ளது

இதை ஐபிஎல் நிர்வாகம் உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது. எல்லோருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு அதோடு இந்திய தேசிய கொடி, ஆசிய கண்டம், அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியா கண்டங்களின் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர். எல்லா கிரிக்கெட் அணிகளுக்கும் இதில் நன்றி தெரிவித்து உள்ளனர். ஐபிஎல் போட்டியில் சென்னை, மும்பை இரண்டும் அதிக ரசிகர்கள் கொண்ட அணியாகும்.

பலர் பார்த்தனர்

பலர் பார்த்தனர்

இதனால் இந்த போட்டியை பலர் பார்த்து உள்ளனர். இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடப்பதே சந்தேகமாக இருந்தது .இதனால் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அந்த தடைகள் எல்லாம் தாண்டி தற்போது ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரசியமாக நடந்து வருகிறது.

Story first published: Tuesday, September 22, 2020, 23:21 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+