Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை கேப்டன் இவரா.. ரோஹித் சர்மா திடீர் நீக்கம்.. ஷாக் ஆன ரசிகர்கள்.. என்ன இது?

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் கீரான் பொல்லார்டு கேப்டன் பதவியை ஏற்றார்.

ரோஹித் சர்மா டாஸ் போட வருவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கீரான் பொல்லார்டு எந்த யோசனையும் இன்றி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஷார்ஜா மைதானத்தில் எளிதாக ரன் குவிக்க முடியும் என்ற நிலையில் மும்பை சேஸிங் செய்ய முடிவு செய்தது.

ரோஹித் காயம்

ரோஹித் காயம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏன் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அவருக்கு கடந்த போட்டியில் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் ஓய்வில் இருக்கிறார் என அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

மூன்று வீரர்கள் நீக்கம்

மூன்று வீரர்கள் நீக்கம்

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தானும் முதலில் பந்து வீசவே விரும்பியதாக கூறினார். சிஎஸ்கே அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. பியுஷ் சாவ்லா, ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வாய்ப்பு பெற்ற வீரர்கள்

வாய்ப்பு பெற்ற வீரர்கள்

அந்த மூவருக்கு பதில் ஜெகதீசன், ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் இம்ரான் தாஹிர் அணியில் இடம் பெற்றனர். சிறந்த சுழற் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் இந்த சீசனில் தன் முதல் போட்டியில் பங்கேற்றுள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள் இந்த மாற்றத்தை வரவேற்றனர்.

மும்பை அணி மாற்றம்

மும்பை அணி மாற்றம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. ரோஹித் சர்மாவுக்கு பதில் சௌரப் திவாரி அணியில் சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் செல்லவிருக்கும் கடைசி வாய்ப்பையும் அந்த அணி இழக்கும்.

Story first published: Friday, October 23, 2020, 19:36 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+