
எப்படி
மொத்தம் 12 சீசன்களில் சிஎஸ்கே 10 சீசன்களில் ஆடி உள்ளது. இதில் அனைத்து சீசனிலும் சிஎஸ்கே பிளே ஆப் சென்றுள்ளது. அதிக முறை பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற சாதனையை சிஎஸ்கே செய்துள்ளது.

சாதனை
அதேபோல் அதிக முறை பைனல் சென்ற அணி, 3 முறை கோப்பை வென்ற அணி என்ற சாதனையும் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. ஆனால் இவ்வளவு சாதனையை படைத்த சிஎஸ்கே அணி இந்த முறை மிக மோசமாக சறுக்கி உள்ளது. இதுவரை 11 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

காரணமே இல்லை
அதிலும் வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டிகளில் கூட சிஎஸ்கே தோல்வி அடைந்தது. கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட சிஎஸ்கே அணி கடைசி நேரத்தில் தோல்வி அடைந்தது. இன்று நடந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் 2020 ஐபிஎல் சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது.

ஏன் மோசம்
இந்த சீசனில் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்ற மோசமான பெயர் சிஎஸ்கே அணிக்கு கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு இது பெரிய அவமானமாக உருவெடுத்து உள்ளது. பொதுவாக பிளே ஆப் செல்ல 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் 7 போட்டிகளில் வெல்ல வேண்டும்.

ஆனால் என்
ஆனால் சிஎஸ்கே அணி இனி மீதம் இருக்கும் 3 போட்டிகளில் வென்றாலும் கூட 6 போட்டியில் மட்டுமே வெற்றிபெறும். இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆப் போட்டிகளில் இருந்து வெளியேறுவது உறுதியாகி உள்ளது. 10 வருடமாக சிஎஸ்கே சுமந்த மகுடத்தை இறக்கி வைத்துள்ளது சிஎஸ்கே!


Click it and Unblock the Notifications