Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்டிப்பாக இல்லை.. வதந்திகளுக்கு ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்த தோனி.. கிரீன் சிக்னல் தந்த சிஎஸ்கே!

துபாய்: சிஎஸ்கே அணியில் அடுத்த வருடமும் கண்டிப்பாக ஆடுவேன்.. ஓய்வு பெற போவதில்லை என்று கேப்டன் தோனி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2020 ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டத்தை இன்று சிஎஸ்கே ஆடுகிறது. பஞ்சாப் அணியை இன்று சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் 5ல் சிஎஸ்கே வென்றுள்ள நிலையில்.. இன்று வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இன்று டாஸ் வென்ற பின் பேட்டி அளித்த தோனி முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டார். தோனியிடம் பேட்டி எடுத்த டேனி மோரிஸ்..இதுதான் உங்களுக்கு கடைசி போட்டியா.. மஞ்சள் உடையில் இனிமேல் நாங்கள் உங்களை பார்க்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார். தோனியின் ஓய்வு குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவர் இந்த கேள்வியை எழுப்பி இருந்தார்.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு பதில் அளித்த தோனி.. கண்டிப்பாக இல்லை, என்று ஒரே வாக்கியத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் தோனி தான் ஓய்வு பெற போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் அடுத்த வருடமும் கண்டிப்பாக ஆடுவேன்.. ஓய்வு பெற போவதில்லை என்று கேப்டன் தோனி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இதன் மூலம் ஓய்வு தொடர்பான சர்ச்சைகளுக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அடுத்த வருடமும் தல தோனியை சிஎஸ்கே அணியில் பார்க்க முடியும். சிஎஸ்கே அணி நிர்வாகமும் இதை முன்பே உறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அளித்த பேட்டியில், அடுத்த சீசனிலும் தோனிதான் சிஎஸ்கே கேப்டனாக இருப்பார்.

நடத்துவார்

நடத்துவார்

தோனிதான் அணியை வழிநடத்துவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எங்களுக்காக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தவர் தோனி. முதல் முறை இப்போதுதான் நாங்கள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து இருக்கிறோம். ஒரே ஒரு மோசமான சீசன் எதையும் மாற்றி விடாது, என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது தோனியும் அடுத்த சீசனில் ஆடுவதை உறுதி செய்துள்ளார்.

Story first published: Sunday, November 1, 2020, 18:12 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+