Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவை கைவிட்டுவிட்டு.. இப்படி சென்றால் என்ன நியாயம்.. ரெய்னா எடுத்த முடிவு.. தோனியும் சிக்கினார்

துபாய்: ஐபிஎல் தொடர் முடிந்த பின் நடக்க இருக்கும் பிக்பாஷ் லீக் போட்டிகளில் சிஎஸ்கே கேப்டன் தோனி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த தொடரில் சிஎஸ்கே வீரர் ரெய்னாவும் கலந்து கொள்ள உள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரில் இந்த முறை சிஎஸ்கே அணி மோசமாக சொதப்பி உள்ளது. சிஎஸ்கே அணியின் மோசமான ஆட்டத்திற்கு பேட்டிங், பவுலிங், நிர்வாக குளறுபடி என்று நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.

முக்கியமாக தோனியின் பேட்டிங் , கேப்டன்சி இந்த முறை கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அதேபோல் ரெய்னா அணியில் இருந்து வெளியேறியதும் சர்ச்சையாகி உள்ளது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் ஆடுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ரெய்னா தொடரில் இருந்து வெளியேறினார். இவரின் உறவினர்கள் கொல்லப்பட்ட காரணத்தால் ரெய்னா திடீர் என்று இந்தியா புறப்பட்டு சென்றார். அதேபோல் பால்கனி அறை கொடுக்கவில்லை என்று ரெய்னாவிற்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே மோதல் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம் தோனியும் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. இந்த சீசனில் தோனியின் பேட்டிங் சரியாக இல்லை. அதேபோல் கேப்டன்சியும் சரியாக இல்லை. தோனி, ரெய்னா இருவரும்தான் இந்த வருடம் சிஎஸ்கேவின் மோசமான தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள பிக்பாஷ் டி20 லீக் போட்டிகளில் தோனி, ரெய்னா கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தோனி, ரெய்னா, யுவராஜ் மூன்று பேரையும் பிக்பாஷ் டி20 லீக் போட்டிகளில் ஆட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ரெய்னா, தோனி இருவரும் ரெடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் பிசிசிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருவதால் பிசிசிஐ அமைப்பிடம் என்ஓசி வாங்க வேண்டும். யுவராஜ் எந்த அனுமதியும் கேட்காமல் நேரடியாக பிக்பாஷ் டி20 லீக் போட்டிகளில் ஆட முடியும். தோனி, ரெய்னா இருவரும் பிக்பாஷ் டி20 லீக் போட்டிகளில் ஆடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில் ரெய்னாவை இதனால் சிஎஸ்கே பேன்ஸ் கலாய்க்க தொடங்கி உள்ளனர். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை கைவிட்டுவிட்டு வெளியேறினீர்கள். அப்படி இருக்கும் போது பிக்பாஷ் டி20 லீக் போட்டிகளில் ஆடுவது ஏன் என்று கேட்டுள்ளனர்.

ஏன் ஆட வேண்டும்

ஏன் ஆட வேண்டும்

அதேபோல் தோனி ஐபிஎல் தொடரிலேயே டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார். தனது டீமிற்கு உள்ளேயே அவரால் பார்மை மீட்டு கொண்டு வர முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் போய் ஏன் அவர் பிக்பாஷ் டி20 லீக் போட்டிகளில் ஆட வேண்டும் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.

Story first published: Friday, October 23, 2020, 15:33 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+