Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு பார்முலா.. கடைசி போட்டியில் தோனி மேஜிக்.. முன்பே நடந்திருந்தால் சிஎஸ்கே கலக்கி இருக்கும்!

துபாய்: இன்று சிஎஸ்கே அணிக்காக பவுலிங் செய்த லுங்கி எங்கிடி மற்றும் இம்ரான் தாஹிர் இருவரும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

2020 ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தை சிஎஸ்கே அணி நெருங்கி உள்ளது. ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சிஎஸ்கே அணி ஆடி வருகிறது.

இன்று நடந்த போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

பவுலிங்

பவுலிங்

இன்று சிஎஸ்கே அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் இருந்து பவுலர்கள்தான் இன்று ஆதிக்கம் செலுத்தினார்கள். போட்டியின் தொடக்கத்தில் முதல் பவர் பிளேவில் பஞ்சாப் ஆதிக்கம் செலுத்தினாலும் போக போக சிஎஸ்கே பவுலர்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

எப்படி

எப்படி

அதிலும் இன்று லுங்கி எங்கிடி , தாஹிர் ஓவர் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்று லுங்கி எங்கிடி தொடக்கத்தில் இருந்தே விக்கெட் எடுக்க வேண்டும் என்று நோக்கத்தில் ஆடி வந்தார். அடுத்த வருடம் சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று மிகவும் சிறப்பாக அவர் பந்து வீசினார்.

விக்கெட்

விக்கெட்

தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால், கே எல் ராகுல் என்ற இரண்டு முக்கியமான பேட்ஸ்மேன்களை லுங்கி விக்கெட் எடுத்தார். இரண்டு பேருக்கும் ஸ்லோ பால் ஸ்விங் போட்டு விக்கெட் எடுத்தார். அதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் விக்கெட்டை தாஹிர் எடுத்தார்.

வயது

வயது

41 வயது நிரம்பிய கெயில் விக்கெட்டை எடுக்க முடியாமல் பல இளம் வீரர்கள் திணறிய நிலையில், 41 வயது நிரம்பிய இன்னொரு வீரரான தாஹிர்தான் கெயிலை அரை சதம் அடிக்கும் முன் சுருட்டி உள்ளார். கடைசி கட்டத்தில் நீசம் விக்கெட்டையும் லுங்கிதான் இன்று எடுத்தார்.

செம

செம

இதெல்லாம் போக சிஎஸ்கேவிற்கு அச்சுறுத்தல் கொடுத்த பூராணையும் தாகூர் காலி செய்தார். இதனால் மொத்தமாக பஞ்சாப்பின் பேட்டிங் ஆர்டர் சரசரவென்று சீட்டு கட்டு போல சரிந்தது. சிஎஸ்கே பவுலிங்கிற்கு அஞ்சிதான் இன்று பஞ்சாப் அணி கூடுதல் பேட்ஸ்மேன்கள் உடன் களமிறங்கியது.ஆனால் அதையும் சிஎஸ்கே காலி செய்துள்ளது.

காலி

காலி

இதுவரை நடந்த 13 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு கிளிக் ஆகாத தோனியின் மேஜிக் இன்றுதான் கிளிக் ஆனது. தோனியின் பவுலிங் ரொட்டேஷன் இத்தனை சீசன்களில் சிஎஸ்கே அணிக்கு பெரிதாக உதவவில்லை. ஆனால் இன்று தோனி கொடுத்த பவுலிங் ரொட்டேஷன் பெரிய அளவில் போட்டியை மாற்றியது. முதல் முறையாக தோனியின் மேஜிக் இன்று வேலை செய்தது.

Story first published: Sunday, November 1, 2020, 18:15 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+