438 நாட்களுக்கு பின் வந்தார்.. முதல்நாளே நினைத்து பார்க்க முடியாத சாதனை.. கேட்டுச்சா.. அதான் தோனி!
மும்பை அணிக்கு எதிராக இன்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியிலேயே தோனி அசாத்திய சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
அபுதாபி: மும்பை அணிக்கு எதிராக இன்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியிலேயே தோனி அசாத்திய சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இன்று நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் விறு விறுப்பாக சென்றது. மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி இதில் பவுலிங் தேர்வு செய்தது.
நேரம் செல்ல செல்ல களம் பேட்டிங் செய்ய சாதகமாக மாறும். இதனால் மும்பை தொடக்கத்திலேயே சென்னை அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது.

சென்னை எப்படி
சென்னை அணி தொடர்ந்து தனது அதிரடியான ஸ்பின் பவுலிங் மூலம் மும்பை அணியை திணற வைத்தது. அதிலும் பியூஸ் சாவ்லா, சாம் கரண் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் மும்பை வீரர்கள் மோசமாக திணறினார்கள். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த மும்பை அணி 20 ஓவருக்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது.

தோனி எப்படி
இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தோனியின் கீப்பிங். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே தோனி மிகவும் சிறப்பாக கீப்பிங் செய்தார். வரிசையாக மிக சிறப்பாக தோனி கேட்சைகளை பிடித்தார். 438 நாட்களுக்கு பின் தோனி களத்திற்கு வந்தார். ஆனால் அதற்கான எந்த அடையாளமும் இல்லை.

செம துடிப்பு
கடைசியாக நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட தோனி கொஞ்சம் சொதப்பினார். ஆனால் இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே மிக சிறப்பாக தோனி ஆடினார். ஒரு வருட ஓய்வில் உடலும், மனமும் அவருக்கு பிட்டாகி இருந்தது . களத்தில் மிகவும் வேகமாக, பழைய தோனியாக செயல்பட்டார்.

என்ன சாதனா
அதிலும் 16வது ஓவரில் லுங்கி ஓவரில் தோனி பிடித்த கேட்ச் எல்லாம் வின்டேஜ் ஸ்டைல் கேட்ச். இந்த நிலையில் இந்த போட்டியில் தோனி பிடித்த இரண்டு கேட்ச்கள் மூலம் ஐபிஎல் போட்டியில் 100 கேட்ச் பிடித்த முதல் கீப்பர் என்ற சாதனையை படைத்து உள்ளார். ஒரு வருடம் கழித்து களத்திற்கு வந்து முதல் நாளே தோனி தொட முடியாத சாதனையை செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications