சிக்னலே சரியில்லையே.. ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற திட்டமா? தோனி செய்த காரியம்.. என்னமோ நடக்கிறது!
துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற போகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். தோனி செய்த காரியம் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.
2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு மிகவும் மோசமான தொடராக அமைந்துள்ளது. தொடக்கத்தில் இந்த தொடரை வெற்றியோடு தொடங்கினாலும் போக போக மிக மோசமாக ஆடி இந்த தொடரில் சிஎஸ்கே பெரிய சரிவை சந்தித்தது.
அதிலும் வரிசையாக டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், மும்பை என்று முக்கியமான அணிகளிடம் எல்லாம் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்துள்ளது.

பிளே ஆப்
இதனால் சிஎஸ்கே அணி தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்து உள்ளது. இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் என்றால் அது தோனியின் மோசமான பார்ம்தான். இந்த தொடரில் தோனி எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே கேப்டன் தோனி 40+ ரன்களை எடுத்தார்.

வேறு எந்த போட்டி
வேறு எந்த போட்டியிலும் தோனி 30 ரன்களை கூட தொடவில்லை. சிஎஸ்கே கேப்டனாக தோனி இந்த சீசனில் மிக மோசமாக சொதப்பினார். பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி அணி தேர்வு வரை பல விஷயங்களில் தோனி மோசமாக சொதப்பினார். ஒரு பக்கம் அணி தேர்வில் சொதப்பிய தோனி இன்னொரு பக்கம் தனிப்பட்ட வகையில் பேட்ஸ்மேனாகவும் சொதப்பிவிட்டார்.

இல்லை
தோனியின் பேட்டிங்கில் பழைய வேகம் இல்லை. அந்த துல்லியம் இல்லாமல் போய்விட்டது. தோனியால் பந்தை பார்த்து கூட அடிக்க முடியவில்லை. லெக் ஸ்பின் பவுலிங்கை அவரால் கணிக்க முடியவில்லை. இப்படி இந்த சீசன் முழுக்க சிஎஸ்கே அணியில் தோனி மிகவும் மோசமாகவே ஆடி உள்ளார். இதனால் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏன் இப்படி
ஆம், தோனி அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் ஆடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதிலும் கடந்த ராஜஸ்தான் மேட்ச்சிற்கு பின் தோனி ஜோஸ் பட்லருக்கு தனது டி ஷர்டை கொடுத்தார். நேற்று போட்டிக்கு பின் பாண்டியா பிரதர்ஸுக்கு தனது டி ஷர்டை கொடுத்தார். இப்படி எல்லோர்க்கும் தனது டி ஷர்டை தோனி வழங்குவது பெரிய அளவில் சந்தேகம் அளிக்கிறது.

தோனி செல்கிறார்
தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா? அதனால்தான் இப்படி டி ஷர்டுகளை நினைவு சின்னம் போல கொடுக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. உங்களுடன் ஆடிய கடைசி போட்டி என்று சின்னம் போல அதை கொடுக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. தோனி பொதுவாக ஓய்வு பெறுகிறார் என்றால் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி திடீரென்று ஓய்வு முடிவை அறிவிப்பார்.

சந்தேகம்
இதனால் இந்த முறையும் அப்படி எதுவும் முடிவு எடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் அடுத்த சீசனுக்கு சிஎஸ்கே அணியை தேர்வு செய்ய வேண்டும். இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று தோனி நேற்று பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் உண்மையில் தோனி ஓய்வு பெறுவாரா அல்லது அடுத்த சீசனிலும் ஆடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications