Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.. ஆனால் எதுவும் பேசவில்லை.. சைலண்ட் ஆன தோனி.. என்ன நடந்தது?

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்த முடிவை தோனி எப்போது எடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் சீசனை தோல்வியுடன் முடிக்க உள்ளது. இதுவரை எந்த சீசனிலும் நடக்காத அளவிற்கு மிக மோசமாக இந்த முறை சிஎஸ்கே அணி ஆடியுள்ளது.

12 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே அணி இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

என்ன

என்ன

இதனால் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இதன் காரணமாக தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. தோனியை கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கடுமையான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

விமர்சனம்

விமர்சனம்

தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும், புதிய இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கூட கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரை நீக்கும் எண்ணத்தில் இல்லை. ஆம் தோனி தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தொடர் வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் நினைக்கிறது.

பேட்டி

பேட்டி

நேற்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் இது தொடர்பாக அளித்த பேட்டியில்,அடுத்த சீசனிலும் தோனிதான் சிஎஸ்கே கேப்டனாக இருப்பார். தோனிதான் அணியை வழிநடத்துவார் என்பதில் என்று நம்புகிறேன். எங்களுக்காக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தவர் தோனி.முதல் முறை இப்போதுதான் நாங்கள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து இருக்கிறோம்.

இப்படி இல்லை

இப்படி இல்லை

இதுவரை இப்படி நடந்தது இல்லை. எந்த அணியும் இவ்வளவு சிறப்பாக ஆடியது கிடையாது. ஒரே ஒரு மோசமான சீசன் எதையும் மாற்றி விடாது., என்று குறிப்பிட்டு இருக்கிறார். தோனி சிஎஸ்கே அணியை மீண்டும் வழி நடத்துவார் என்று நம்புகிறேன் என்று சிஎஸ்கே சிஇஓ கூறியுள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதனால் தோனி ஒப்புக்கொண்டால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தொடர்வார், அவர் வேண்டாம் என்றால் வேறு வீரர் கேப்டனாக வருவார் என்று கூறுகிறார்கள். முழுக்க முழுக்க இது தோனியின் முடிவு என்று சிஎஸ்கே கருதுகிறது. ஆனால் தோனி இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை என்று தகவல்கள் வருகிறது. சிஎஸ்கே அணியிலும், ஐபிஎல்லிலும் நீடிப்பது குறித்து தோனி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

முடிவு

முடிவு

சிஎஸ்கே சிஇஓ வெளிப்படையாக அறிவித்துவிட்டாலும் தோனி தனது தனிப்பட்ட முடிவை எடுக்கவில்லை. இது முக்கியமான விஷயம்.. இதனால் இறுதி முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் சிஎஸ்கே அணி நிர்வாகம் நினைக்கிறது. ஆனால் தோனி இதில் எந்த கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார் என்கிறார்கள்.

Story first published: Wednesday, October 28, 2020, 13:10 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+