Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1 வருடம் இல்லை.. அதற்கும் மேல்.. சிஎஸ்கே தந்த வாய்ப்பு.. தோனி கையில் எடுத்த அசர வைக்கும் திட்டம்!

துபாய்: சிஎஸ்கே அணியில் தோனி அடுத்த ஒரு வருடம் மட்டுமல்ல இன்னும் சில வருடங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடர் தற்போது சிஎஸ்கே அணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் தோல்விகளை தழுவினாலும் கடைசி கட்டத்தில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தது.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சிஎஸ்கே அணி அடுத்தடுத்து கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப் அணிகளை வீழ்த்தி வெற்றியோடு வெளியேறி உள்ளது.

வெற்றி

வெற்றி

இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் பலர் சரியாக ஆடவில்லை. வாட்சன், ஜாதவ், சாவ்லா என்று பல மூத்த வீரர்கள் சரியாக ஆடவில்லை. இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஆடிய வாட்சன், ஜாதவ் போன்ற வீரர்கள் அடுத்த முறை ஆடுவது உறுதியில்லை என்று கூறுகிறார்கள். பல வீரர்களுக்கு இதுதான் கடைசி தொடர் என்கிறார்கள்.

உறுதி

உறுதி

அதே சமயம் சிஎஸ்கே அணியில் ஆடி வரும் ரூத்துராஜ், ராயுடு, லுங்கி, சாம் கரன், ஜடேஜா போன்ற வீரர்கள் அடுத்த சீசனில் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் தோனியும் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ஆடுவது உறுதியாகி இருக்கிறது.

தோனி

தோனி

அடுத்த சீசனில் ஆடுவேன் என்பதை இன்று தோனியே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கண்டிப்பாக ஓய்வு பெற மாட்டேன் என்று தோனி இன்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகமும் தோனியின் கேப்டன்சி அடுத்த வருடம் தொடர வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளது.

கூறியது என்ன

கூறியது என்ன

இந்த நிலையில் தோனி இந்த சீசன் மட்டுமல்ல இன்னும் 2 சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆடுவார் என்று கூறுகிறார்கள். அடுத்த சீசனில் ஆடுவது உறுதி. அதற்கு அடுத்த 2022 சீசனிலும் சிஎஸ்கே அணியில் தோனியை ஆட வைக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் நினைக்கிறது.

அணி நிர்வாகம்

அணி நிர்வாகம்

ஆம் இந்த தொடரின் தொடக்கத்திலேயே சிஎஸ்கே சிஇஓ காசி விசுவநாதன் அளித்த பேட்டியில், சிஎஸ்கே அணியில் தோனி இன்னும் 2-3 சீசன்கள் ஆட வேண்டும் என்று நம்புகிறோம். அவரிடம் திறமை இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். தோனியும் இன்று தனது பேட்டியில் அணியில் ஆடும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

விருப்பம்

விருப்பம்

இதனால் இன்னும் 2 சீசன்களிலாவது கண்டிப்பாக தோனி ஆடுவார் என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. அணியை முழுமையாக செட் செய்துவிட்டு அதன்பின்தான் தோனி சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவார்.. அணியை மோசமான நிலையில் விட்டுவிட்டு வெளியேற மாட்டார் என்கிறார்கள்.

Story first published: Sunday, November 1, 2020, 18:57 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+