Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்கிரீன்ல பாருங்க.. நடுவரிடம் வாக்கு வாதம் செய்த தோனி.. களத்தில் ஏற்பட்ட குழப்பம்.. பரபர சம்பவம்!

சார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மிகவும் பரபரப்பாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையின் பவுலிங்கை ராஜஸ்தான் அடித்து துவைத்துள்ளது.

இதில் சென்னை அணி டாஸ் வென்ற பின் பவுலிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் அனைத்து பந்துகளையும் ராஜஸ்தான் அடித்து பறக்கவிட்டது.

கேட்ச் பிடித்தார்

கேட்ச் பிடித்தார்

இந்த போட்டியில் சாஹர் போட்ட 18வது ஓவரில், டாம் கரன் பேட்டிங் செய்தார். இவர் வேறு யாரும் இல்லை. சென்னை அணியின் கடை குட்டி சிங்கம் சாம் கரனின் சகோதரர்தான். இவர் பேட்டிங் இறங்கி, அப்போதுதான் ஆட தொடங்கினார். இந்த நிலையில் சாஹர் அப்போது வீசிய பந்தை தோனி கேட்ச் பிடித்தார்.

என்ன நிலை

என்ன நிலை

இந்த பந்து டாம் பேட்டில் பட்டது போல சத்தம் கேட்டது. இதை தோனி கேட்ச் பிடித்த நிலையில், நடுவர் விக்கெட் கொடுத்தார். ஆனால் டாம் கரன் இது விக்கெட் இல்லை என்று கூறினார். ஆனால் ராஜஸ்தான் அணியிடம் ரிவ்யூ மீதம் இல்லை. இதனால் அவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நிலை என்ன

நிலை என்ன

இதையடுத்து டாம் உடனே வெளியேற வேண்டும் என்று நடுவர் கூறினார். அவர் வெளியேறும் போதே, சென்னை வீரர்கள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை செய்தனர். டாம் கரன் விக்கெட் போல தெரியவில்லை. அவரை மீண்டும் அழைக்கலாமா என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

பேசினார்

பேசினார்

அப்போது, தோனியின் கேட்சை ரிவ்யூ செய்ய நடுவர்கள் முயன்றனர். தோனி, தனது கேட்ச் குறித்து, நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பெரிய ஸ்கீரில் பாருங்கள் என்று தோனி நடுவர்களிடம் கூறினார். அப்போது அந்த விக்கெட்டை கேட்சை சோதனை செய்தனர்.

விக்கெட் இல்லை

விக்கெட் இல்லை

இந்த நிலையில் அந்த சோதனையில், தோனி பந்தை பிடிக்கும் முன், அந்த பந்து தரையில் கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து விக்கெட் திரும்ப பெறப்பட்டது. டாம் கரனின் இந்த விக்கெட் - ரிவ்யூ காரணமாக மொத்தமாக களத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

Story first published: Tuesday, September 22, 2020, 21:35 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+