Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேசியும் பலன் இல்லை.. களத்தில் டென்சன் ஆன தோனி.. சிஎஸ்கேவின் பிரம்மாஸ்திரத்தையே காலி செய்த சஞ்சு!

சார்ஜா: சென்னை அணியின் அனைத்து திட்டங்களையும் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் காலி செய்து இருக்கிறார்.

மிகவும் பரபரப்பாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி டாஸ் வென்ற பின் பவுலிங் தேர்வு செய்தது.

சார்ஜா மைதானம் பேட்டிங் செய்ய அதிக வசதியாக இருக்கும். இதனால் முதலில் பவுலிங் செய்துவிட்டு, சேஸிங்கில் ராஜஸ்தானை வீழத்த தோனி முடிவு செய்தார்.

ஆனால் என்ன நடந்தது

ஆனால் என்ன நடந்தது

அதிலும் சென்னை அணி தனது ஸ்பின் பவுலிங்கை நம்பி இறங்கியது. சாவ்லா, ஜடேஜா, சாம் கரன் ஆகியோரை களமிறக்கி ராஜஸ்தானை வீழ்த்தலாம் என்று நினைத்தது. முக்கியமாக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை ஜடேஜாவை வைத்து எடுக்க தோனி திட்டமிட்டு இருந்தார்.

சாம்சன் எப்படி

சாம்சன் எப்படி

ஆனால் ராஜஸ்தான் ஒன் டவுன் வீரர் சஞ்சு சாம்சான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அதிலும் சென்னையின் ஸ்பின் படையை சஞ்சு சாம்சான் அடித்து காலி செய்தார். கடந்த போட்டியில் நன்றாக பந்து வீசிய சாம் கரன், சாவ்லா இரண்டு பேரின் ஓவரையும் அடித்து துவைத்தார்.

மிக மோசம்

மிக மோசம்

அதிலும் சாவ்லா ஓவரில், ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர் எல்லாம் அடித்தார். அடுத்தடுத்து சிக்ஸர் என்று 11 ஓவருக்கு உள்ளேயே சஞ்சு சாம்சான் மட்டும் 9 சிக்ஸர் அடித்தார். சென்னை அணி 10 ஓவர் வீசி இருந்த போதே சஞ்சு சாம்சான் 74 ரன்கள் எடுத்தார்.

தோனி டென்ஷன்

தோனி டென்ஷன்

அடுத்தடுத்து எல்லோர் ஓவரிலும் சஞ்சு சாம்சான் சிக்ஸர் அடித்தார். இதனால் களத்தில் தோனியே பொறுமை இழந்தார். முதலில் சாம் கரனிடம்பேசினார். அதன்பின் சாவ்லாவிடம் பேசினார். பின்னர் ஜடேஜாவிடாம் பேசினார். ஆனால் தோனி கொடுத்த அறிவுரையும் சரி, பவுலர்கள் முடிவும் சென்னைக்கு உதவவில்லை. தொடர்ந்து சஞ்சு சாம்சான் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்தார்.

சேர்ந்தார்

சேர்ந்தார்

இவருடன் ஸ்டீவ் ஸ்மித்தும் சேர்ந்து கொண்டார். இதனால் ராஜஸ்தான் அணியின் ரன் ரெட் உயர்ந்து கொண்டே சென்றது. ஸ்பின் பவுலிங்கை சென்னை அணி தனது பிரம்மாஸ்திரம் போல வைத்து இருந்தது. ஆனால் அதுவே சென்னைக்கு எதிராக திரும்பி உள்ளது. சஞ்சு சாம்சான் சென்னையை மொத்தமாக நடுங்க வைத்துள்ளார்.

Story first published: Tuesday, September 22, 2020, 21:35 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+