Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஆதிக்கம் செலுத்துகிறார்கள்".. தோனி சறுக்கியதற்கு இப்படி ஒரு காரணமா? உண்மையை உடைத்த ஸ்ரீகாந்த்!

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த முறை சறுக்கியதற்கு என்ன காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார்.

சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஒரு கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார்.

இந்த தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் சரியாக இல்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 40+ ரன்களை தோனி எடுத்தார். வேறு எந்த போட்டியிலும் அவர் ஆடவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

தோனியின் பேட்டிங் இந்த முறை மிக மோசமாக இருந்தது. தோனியிடம் இருந்த பழைய வேகம், துல்லியம் இப்போது இல்லை. இந்த நிலையில் தோனி இந்த முறை சறுக்கியதற்கு என்ன காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், நான் நிறைய பேட்ஸ்மேன்களை பார்த்து இருக்கிறேன். நல்ல டெக்னீக் இல்லாத பலர் காணாமல் போய் உள்ளனர்.

பழைய தோனி

பழைய தோனி

கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கில் நல்ல கம்பேக் கொடுக்க வேண்டும் என்றால் துடிப்பாக ஆட வேண்டும். ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய வேண்டும். ஆக்ரோஷமான அணுமுறைதான் சரியாக இருக்கும். தோனி அப்படித்தான் ஆடி இருக்க வேண்டும். தோனி பழைய தோனி போல ஆடி இருக்க வேண்டும்.

தோனி

தோனி

தோனி ஒரு காலத்தில் எதை பார்த்தும் பயப்பட மாட்டார்.களத்தில் அதிரடியாக ஆடுவார். பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்யும் விதத்தில் ஆடுவார். அவரிடம் கொஞ்சம் கூட பயம் இருக்காது. எப்போதும் தோனி பேட்டிங் செய்யும் போது பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்.

பவுலர்கள்

பவுலர்கள்

ஆனால் இந்தமுறை பவுலர்கள் மீது தோனியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த முறை பவுலர்கள்தான் தோனி மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதுதான் தோனியின் தோல்விக்கு முக்கியமான காரணம். பவுலர்கள் தன்னை கட்டுப்படுத்துவதை தோனி எப்போதும் அனுமதித்தது கிடையாது. தோனியின் கேப்டன்சியும் இந்த முறை சரியாக இல்லை.

கேப்டன்சி

கேப்டன்சி

அணியில் அவர் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தோனி எப்போதும் மூத்த வீரர்களை பயன்படுத்துவது தவறான உதாரணம். இங்குதான் சிஎஸ்கே டீம் சறுக்கிறது. தோனி இந்த முறை முறையான திட்டங்களை வகுக்கவில்லை என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, October 25, 2020, 18:37 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+