Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கட்டாய தேவை.. கேள்வி கேட்க காத்திருக்கும் தலைகள்.. தோனிக்கு வேறு வழியே இல்லை.. என்ன செய்வார்?

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் கண்டிப்பாக நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி இருக்கிறார்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆடி உள்ளது. இந்த தொடரில் தொடக்கத்தில் மோசமாக சொதப்பி வரிசையாக தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

இதுவரை 13 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே அணி வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விக்கு அணியின் பேட்டிங் சொதப்பியது காரணமாக பார்க்கப்படுகிறது.

எப்படி

எப்படி

இந்த முறை சிஎஸ்கே அணியில் மூத்த வீரர்கள் யாருமே சரியாக பேட்டிங் செய்யவில்லை. டு பிளசிஸ், ராயுடு சில போட்டிகளில் நன்றாக ஆடினார்கள்.ஆனால் அவர்கள் எல்லா போட்டியிலும் அதிரடி காட்டவில்லை. வாட்சன் மூன்று போட்டியில் மட்டுமே நன்றாக ஆடினார்.

வேறு என்ன

வேறு என்ன

இன்னொரு பக்கம் ஜாதவ், பிராவோ யாருமே சரியாக பேட்டிங்கில் பங்களிப்பு நிகழ்த்தவில்லை. ஜடேஜா மட்டுமே எல்லா போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்காக உழைத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே அணியில் மோசமாக ஆடிய வீரர் என்றால் அது தோனிதான். ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக தோனி 40+ ரன்களை எடுத்தார். வேறு எந்த போட்டியிலும் அவர் சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

தொடர்ந்து வரிசையாக எல்லா போட்டிகளிலும் சொதப்பினார். அதிலும் சில போட்டிகளில் இரட்டை இலக்க எண்களை கூட எடுக்க முடியாமல் தோனி திணறினார். இதனால் இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி இருக்கிறார். பஞ்சாப்பிற்கு எதிராக தோனி கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கட்டாயம் ஏன்

கட்டாயம் ஏன்

இந்த தொடருக்கு பின் ஒவ்வொரு வீரர்களின் ஆட்டம் குறித்தும் சிஎஸ்கே அணி விசாரணை செய்யும். இது தொடர்பான ரிப்போர்ட் தயார் செய்யப்படும். இதில் தோனியின் மோசமான ஆட்டமும் கண்டிப்பாக கவனிக்கப்படும். தோனியும் கேள்விக்கு உட்படுத்தப்படுவார். இதனால் இன்று நன்றாக ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்த வருடம்

அடுத்த வருடம்

அடுத்த வருட சீசனில் தோனி சிஎஸ்கே அணிக்கு ஆடுவது உறுதியாகிவிட்டது.ஆனால் ஒரு கேப்டனாக, பேட்ஸ்மேனாக தோனி.. சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் . தோனியை நம்பி முதலீடு செய்து இருக்கும் நிர்வாகத்திற்கு அவர் நம்பிக்கை கொடுக்க வேண்டும். விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று கடைசி போட்டியில் தோனி அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Story first published: Sunday, November 1, 2020, 11:49 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+