Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதுவும் சரியில்லை.. பல விஷயங்கள் எதிராக இருந்தது.. சூசகமாக பேசிய தோனி.. பெரிதாகும் விரிசல்!

துபாய்: சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பல விஷயங்கள் காரணமாக இருந்தது, எல்லாம் எங்களுக்கு எதிராக சென்றது என்று கேப்டன் தோனி பேட்டி அளித்துள்ளார்.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சிஎஸ்கே மிக மோசமான தோல்வியை தழுவியது. சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது.

நேற்று டாஸ் தோல்வி அடைந்த பின் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த நிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணங்களை கேப்டன் தோனி பட்டியலிட்டு உள்ளார். அதில், அடுத்த மூன்று போட்டிகளில் நாங்கள் கடினமாக முயற்சி செய்து நன்றாக ஆடுவோம் என்று நம்புகிறேன். நாங்கள் இந்த சீசனில் இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தோம். அந்த போட்டியில் பவுலிங் நன்றாக இருந்தது. ஆனால் பேட்டிங் சரியாக இல்லை.

பலவீனம்

பலவீனம்

சிஎஸ்கேவின் பலவீனம் அப்போதுதான் தெரிந்தது. ராயுடு காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் ஆடவில்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் அன்று நடந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. எங்களின் ஓப்பனிங் சொதப்பினால் மிடில் ஆர்டரும் எப்போதும் சொதப்புகிறது. கிரிக்கெட் வாழ்க்கையில் எல்லாம் உங்களுக்கு எதிராக இருந்தால் கொஞ்சம் லக் தேவையாக இருக்கும்.

இந்த முறை எதுவும் இல்லை

இந்த முறை எதுவும் இல்லை

ஆனால் இந்த முறை எதுவுமே எங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த தொடரில் தொடக்கத்தில் எங்களால் டாஸ் வெல்ல முடியவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும் போது மைதானத்தில் பனியே இல்லை. ஆனால் நாங்கள் பவுலிங் செய்யும் போது திடீர் என்று பனி அதிகம் வந்துவிட்டது. பல விஷயங்கள் எனக்கு எதிராக செயல்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொள்ள வேண்டும்

சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சரியாக ஆடாமல் போனதற்கு 100 காரணங்களை சொல்ல முடியும். நீங்கள் உங்கள் திறமைக்கு ஏற்றபடி ஆடுகிறீர்களா என்பதே இங்கு ஒரே கேள்வி. எங்கள் அணியின் பிளேயிங் லெவன் பட்டியலை எடுத்து பாருங்கள்.

அணிக்காக ஆடினார்கள்

அணிக்காக ஆடினார்கள்

யாரெல்லாம் அணிக்காக ஆடினார்கள் என்று பாருங்கள்.அந்த புள்ளி விவரத்தை இந்த வருடம் பார்த்தாலே தெரியும். இந்த வருடம் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. மொத்தமாக ஒரு அணியில் 3-4 வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றால் அது அணிக்குதான் சிக்கலாக மாறும். மொத்தமாக அணியின் கூட்டு முயற்சி சிறப்பானதாக இல்லை.

சோதனை செய்ய வேண்டும்

சோதனை செய்ய வேண்டும்

சில விஷயங்களை சோதிக்க வேண்டும், என்று தோனி குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் வீரர்கள் எல்லோரையும் தோனி முதல்முறையாக நேரடியாக விமர்சனம் செய்துள்ளார். யாரும் சரியாக ஆடவில்லை என்று தோனி முதல்முறை விமர்சனம் செய்துள்ளார். சிஎஸ்கே அணிக்குள் ஏற்கனவே விரிசல் இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது தோனி வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்து உள்ளார்.

வெளிப்படை

வெளிப்படை

வெளிப்படையாக தோனி வீரர்கள் மீது புகார் வைத்துள்ளார். இந்த சீசனுக்கு பின் அணியில் நிறைய களையெடுப்பு நடக்கும் என்று கூறப்பட்டது. விரைவில் அதற்கான பணிகள் நடக்கும் என்று தகவல்கள் வந்தது . தற்போது தோனியின் பேட்டி ஏறத்தாழ அதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 24, 2020, 8:09 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+