Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மோசமான சீசன் எதையும் மாற்றிவிடாது.. 2021ல் தோனிதான் சிஎஸ்கே கேப்டன்..அணி நிர்வாகம் அதிரடி முடிவு

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டனாக 2021லும் தோனிதான் செயல்படுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த 12 ஐபிஎல் தொடரில் 10ல் சிஎஸ்கே ஆகியுள்ளது.

10 சீசனிலும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சென்றுள்ளது. ஆனால் முதல் முறையாக சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

மோசம்

மோசம்

சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை ஆடி உள்ள 8 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்று மோசமாக ஆடியுள்ளது. சிஎஸ்கேவில் கிட்டத்தட்ட முக்கியமான வீரர்கள் எல்லோரும் மோசமாக சொதப்பி உள்ளனர். வாட்சன், ஜாதவ், தோனி, சாவ்லா, சாகர், டு பிளசிஸ்,ராயுடு என்று எல்லோருமே சிஎஸ்கே அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளனர்.

காரணம்

காரணம்

அதிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. கேப்டனாகவும் தோனி இந்த முறை சரியாக செயல்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்ந்து செயல்படுவாரா என்று கேள்விகள் எழுந்தது. அடுத்த சீசனில் தோனி கேப்டனாக இருப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்று கேள்விகள் எழுந்தது.

நீக்கம்

நீக்கம்

பலரும் தோனி பதவியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது, தோனி மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் கோபத்தில் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில்தான், சிஎஸ்கே அணியின் கேப்டனாக 2021லும் தோனிதான் செயல்படுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அவர் தனது பேட்டியில், அடுத்த சீசனிலும் தோனிதான் சிஎஸ்கே கேப்டனாக இருப்பார். தோனிதான் அணியை வழிநடத்துவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எங்களுக்காக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தவர் தோனி.

முதல் முறை

முதல் முறை

முதல் முறை இப்போதுதான் நாங்கள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து இருக்கிறோம். இதுவரை இப்படி நடந்தது இல்லை. எந்த அணியும் இவ்வளவு சிறப்பாக ஆடியது கிடையாது. ஒரே ஒரு மோசமான சீசன் எதையும் மாற்றி விடாது.

ஒரே ஒரு சீசன்

ஒரே ஒரு சீசன்

ஒரே ஒரு சீசனில் மோசமாக ஆடியதால் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. இந்த முறை நாங்கள் சரியாக ஆடவில்லை. வெல்ல வேண்டிய சில போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டோம். அதுதான் எங்கள் பின்னடைவுக்கு காரணம்.

Story first published: Tuesday, October 27, 2020, 9:56 [IST]
Other articles published on Oct 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+