Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்னால இது கூட முடியாதா? கடும் கோபத்தில் பொங்கிய பாண்டியா.. பும்ராவுடனே மோதல்.. பரபரப்பு!

அபுதாபி: நேற்று மைதானத்தில் இந்திய அணியின் இரண்டு மூத்த வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் இடையே அபுதாபியில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் மும்பை நேற்று மாஸ் ஆட்டம் ஆடியுள்ளது. இதில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது.

அதன்பின் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே மும்பைதான் ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் பவுலிங் செய்யும் போது மும்பை வீரர்கள் அதிரடி காட்டினார்கள். மும்பை அணியின் பீல்டிங் செட்டப் நேற்று மிக சிறப்பாக இருந்தது. ரோஹித் போட்ட பிளானும் பெரிய அளவில் கை கொடுத்தது.

என்ன பிளான்

என்ன பிளான்

இந்த நிலையில் கைரன் பொல்லார்ட் நேற்று 12 ஓவரை மும்பை அணிக்காக வீசினார். அப்போது இயான் மார்கன் பேட்டிங் செய்து வந்தார். பொல்லார்ட் வீசிய ஆப் - கட்டர் பந்தை மார்க் அப்படியே திருப்பி பாய்ன்ட் திசைக்கு அனுப்பினார். அந்த இடத்தில் ஏற்கனவே பும்ரா பீல்டிங் செய்து கொண்டு இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஷார்ட் பைன் லெக் திசையில் இருந்த பும்ரா இந்த பந்தை ஓடி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அவரிடம் இருந்து நீண்ட தூரத்தில் பந்து இருந்தது. சில மீட்டர்கள் அவர் வேகமாக ஓடியும் கூட, அவரால் பந்தை தடுக்க முடியவில்லை. இதனால் பந்து பவுண்டரி நோக்கி சென்றது .

பும்ரா வந்தார்

பும்ரா வந்தார்

அப்போதுதான் புயல் போல தெர்ட் மேன் திசையை நோக்கி பும்ரா வேகமாக ஓடி வந்தார். அவர் ஸ்கோயர் லெக் இடத்தில் இருந்து இவ்வளவு தூரம் ஓடி வந்தது பெரிய விஷயம். கஷ்டப்பட்டு பவுண்டரியில் விழுந்து, பந்தை தடுக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. பந்து பவுண்டரி சென்றது.

மிக கஷ்டம்

மிக கஷ்டம்

இதன் பின் பாண்டியா பும்ராவிடம் கோபம் அடைந்தார். நான் இவ்வளவு தூரம் ஓடி வருகிறேன். உன்னால் தாவ கூட முடியாதா என்று பும்ராவை பார்த்து கோபமாக கேட்டார். அதேபோல் கோபமாக சைகையும் செய்தார். அதேபோல் அவரிடமே பந்தை மிக கோபமாக வீசினார். இரண்டு நெருங்கிய நண்பர்கள் இப்படி வாக்குவாதம் செய்தது களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Story first published: Thursday, September 24, 2020, 16:13 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+