Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்புக் கணக்கு போட்ட டெல்லி.. பைனலுக்கு முன் மறக்காமல் சொல்லிக் காட்டிய ரோஹித்!

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரே குறையை போக்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியை பற்றி கேப்டன் ரோஹித் சர்மா இறுதிப் போட்டிக்கு முன் நினைவு கூர்ந்துள்ளார்.

பரபரப்பான 2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் மும்பை அணி வென்றால் அது அந்த அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை ஆகும்.

மும்பை அணியின் பலம்

மும்பை அணியின் பலம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் பந்துவீச்சு தான். பும்ரா, ட்ரென்ட் போல்ட் இணைந்து பவர்பிளே ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த சீசன்களில் ட்ரென்ட் போல்ட் போன்ற ஒரு துணை பும்ராவுக்கு கிடைக்கவில்லை.

அணி மாற்றம்

அணி மாற்றம்

கடந்த இரு சீசன்களாக டெல்லி அணியில் இடம் பெற்று இருந்தார் ட்ரென்ட் போல்ட். அவரை 2020 ஐபிஎல் தொடருக்கு முன் அணி மாற்றம் செய்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனுப்பி வைத்தது டெல்லி. அது டெல்லி அணிக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது.

22 விக்கெட்கள்

22 விக்கெட்கள்

இந்த சீசனில் ட்ரென்ட் போல்ட் 22 விக்கெட்கள் வீழ்த்தி மும்பை அணியில் பும்ராவுக்கு அடுத்து அதிக விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அவரே தான் டெல்லி அணியை பிளே-ஆஃப் சுற்றில் நிலைகுலைய வைத்து அந்த அணியின் தோல்விக்கு வித்திட்டார்.

சிறந்த பந்துவீச்சாளர்

சிறந்த பந்துவீச்சாளர்

இந்த நிலையில் ட்ரென்ட் போல்ட்டை தங்கள் அணிக்கு டெல்லி மாற்றம் செய்ததை குறிப்பிட்ட ரோஹித் சர்மா, எங்கள் அணிக்கு பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் ஒருவர் தேவைப்பட்டது. நாங்கள் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தோம். அதில் ட்ரென்ட் போல்ட் தான் சிறந்த புதிய பந்தை வீசும் பந்துவீச்சாளர் என்றார்.

எங்களின் அதிர்ஷ்டம்

எங்களின் அதிர்ஷ்டம்

நாங்கள் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என விரும்பினோம். டெல்லி அவரை எங்களுக்கு கொடுத்தது எங்களின் அதிர்ஷ்டம். அவர் இதுவரை எங்களை ஏமாற்றவில்லை. அவர் எங்கள் அணியின் சொத்து. இன்னும் ஒரு முறை தன் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என நம்புகிறேன் என்றார் ரோஹித் சர்மா.

Story first published: Tuesday, November 10, 2020, 17:01 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+