Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்! பைனலே வந்துருச்சு.. இந்த மேட்ச்சாவது ரன் எடுப்பீங்களா?

துபாய் : 2020 ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியை எட்டி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

இந்த இறுதிப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மும்பை அணி எல்லா வகைகளிலும் பலமாக உள்ளது. ஆனால், அணியின் கேப்டன் மட்டுமே சரியாக ஆடவில்லை. அதுதான் அந்த அணியின் ஒரே பலவீனம்.

இரண்டு அரைசதம்

இரண்டு அரைசதம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரில் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். 54 பந்துகளில் 80, 45 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இரண்டு போட்டிகளில் மட்டும் மிரட்டி இருந்தார். அதை தவிர இரண்டு போட்டிகளில் 35, 35 ரன்கள் எடுத்து இருந்தார்.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

இந்த நான்கு இன்னிங்க்ஸ் தவிர மற்ற 7 இன்னிங்க்ஸ்களில் ஒவ்வொரு முறையும் 10 ரன்களுக்கும் குறைவாகவே ரன் எடுத்தார். அந்த 7 இன்னிங்க்ஸ்களில் அவர் மொத்தமாக 51 பந்துகளில் 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 86.

பிளே-ஆஃப்

பிளே-ஆஃப்

ரோஹித் சர்மாவை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என பலரும் பொங்கிய போதும் கூட ரோஹித் ஐபிஎல் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை. அவரது மோசமான செயல்பாடுகள் பிளே-ஆஃப் போட்டியிலும் கூட தொடர்ந்தது.

ரன் குவிப்பாரா? இல்லையா?

ரன் குவிப்பாரா? இல்லையா?

தற்போது இறுதிப் போட்டியே வந்து விட்டது. ரோஹித் சர்மா இறுதிப் போட்டியிலாவது ரன் குவிப்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா இடையே தொடர்ந்து ஓய்வில் தான் இருக்க வேண்டும்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

டெஸ்ட் தொடருக்கு முன் அவர் ஆட உள்ள கடைசி போட்டி ஐபிஎல் இறுதிப் போட்டி தான். அதில் அவர் ரன் குவித்தால் அது அவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் ஆட்டமாக இருக்கும். ரோஹித் சர்மா மனது வைப்பாரா? மறக்க முடியாத இன்னிங்க்ஸ் ஒன்றை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடுவாரா? என ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

Story first published: Monday, November 9, 2020, 20:33 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+