Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரள வைக்கும் ஐபிஎல் ரெக்கார்டு.. இது மட்டும் நடந்தால் ரோஹித் சர்மாவை யாராலும் தொட முடியாது!

துபாய் : ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா செய்துள்ள ஒரு சாதனையை ஏற்கனவே எந்த வீரரும் இதுவரை வீழ்த்தவில்லை.

தற்போது மீண்டும் ஐபிஎல் கோப்பை வென்றால் மற்றொரு புதிய உச்சத்தை தொடுவார் ரோஹித் சர்மா.

குறிப்பாக கேப்டன்சியில் அவர் சாதனையை யாராலும் தொட முடியாத நிலை ஏற்படும்.

ஐந்து முறை கோப்பை

ஐந்து முறை கோப்பை

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பை வென்ற ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. மும்பை இந்தியன்ஸ் நான்கு முறை தானே கோப்பை வென்றுள்ளது. அப்புறம் எப்படி? மும்பை அணியில் ரோஹித் இணையும் முன் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அவர் ஆடினார்.

கேப்டனாக நான்கு முறை

கேப்டனாக நான்கு முறை

அப்போது 2009 ஐபிஎல் தொடரை டெக்கான் சார்ஜர்ஸ் வென்ற போது அந்த அணியில் ரோஹித் சர்மாவும் இடம் பெற்று இருந்தார். அதன் பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா.

புதிய உச்சம்

புதிய உச்சம்

ஐந்து வீரராகவும், நான்கு முறை கேப்டனாகவும் ஐபிஎல் கோப்பை வென்று சாதித்துள்ள அவர் 2020 ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் வென்றால் புதிய உச்சத்தை தொடுவார். வீரராக ஆறு முறையும், கேப்டனாக ஐந்து முறையும் ஐபிஎல் கோப்பை வெல்வார்.

தோனியாலும் முடியாது

தோனியாலும் முடியாது

எதிர்காலத்தில் வீரராகக் கூட சிலர் அவரது அதிக ஐபிஎல் கோப்பை சாதனையை முந்த வாய்ப்புள்ளது. ஆனால், கேப்டனாக அவரது சாதனையை தொடுவது கடினமே. தோனி மட்டுமே மூன்று ஐபிஎல் கோப்பை வெற்றிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார். அவரும் 2021 ஐபிஎல் தொடருக்கு பின் ஐபிஎல்-இல் ஆடுவது சந்தேகமே.

Story first published: Tuesday, November 10, 2020, 14:24 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+