For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவை காலி செய்துவிட்டார்.. இவர் வாயிலிருந்து நல்ல வார்த்தையே வராதா?.. சிக்கலில் முக்கிய புள்ளி

துபாய்: சிஎஸ்கே அணியின் மோசமான சொதப்பலுக்கும், தொடர் தோல்விக்கும் பயிற்சியாளர் பிளமிங்தான் காரணம் என்று சில கிரிக்கெட் ரசிகர்கள் புகார்களை வைக்க தொடங்கி உள்ளனர்.

12 ஐபிஎல் தொடரில் 10 வருடமாக சிஎஸ்கே கட்டி ஆண்ட கோட்டை தற்போது இடிந்து விழுந்து உள்ளது. எல்லா வருடமும் பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெயரை சிஎஸ்கே அணி இழந்து இருக்கிறது.

2020 ஐபிஎல் தொடரை தொடக்கத்தில் நன்றாக ஆடினாலும் அதற்கு அடுத்த போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டிகளில் கூட சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தது.

காரணம்

காரணம்

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும், பலரும் அணியின் தோல்விக்கு பயிற்சியாளர் பிளமிங்தான் காரணம் என்று கூறியுள்ளனர். பயிற்சியாளர் பிளமிங் நிறைய தவறான முடிவுகளை எடுத்துவிட்டார். அணியின் தோல்விக்கு அதுதான் காரணமாக அமைந்தது என்று குற்றச்சாட்டுகளை ஆடுகிறார்கள்.

குற்றச்சாட்டு என்ன

குற்றச்சாட்டு என்ன

அதன்படி 2020 தொடருக்கு முன் நடந்த சின்ன ஐபிஎல் ஏலத்திலேயே பிளமிங் தேவையான வீரர்களை அணியில் எடுத்து இருக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் வீரர்களின் பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கு மாற்று வீரர்களை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் பிளமிங் அப்படி செய்யவில்லை. சாம் கரனை மட்டுமே சிஎஸ்கே அணி எடுத்தது.

சொதப்பிவிட்டார்

சொதப்பிவிட்டார்

வீரர்கள் பார்மில் இல்லை என்று தெரிந்தும் அவர் சரியான வீரர்களை ஏலம் எடுக்கவில்லை. அங்கேயே பிளமிங் சொதப்பிவிட்டார் என்கிறார்கள். அதேபோல் அணியில் இருக்கும் மற்ற வீரர்களையும் பார்மிற்கு கொண்டு வர பிளமிங் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஐபிஎல் போட்டி அமீரகத்தில் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி பேட்ஸ்மேன்களை தயார் செய்து இருக்க வேண்டும்.ஆனால் அதை பிளமிங் செய்யவில்லை.

ரெய்னா

ரெய்னா

ரெய்னா, ஹர்பஜன் அணியில் இல்லை. அதை காரணம் காட்டி மாற்று வீரர்களை அணியில் எடுத்து இருக்க வேண்டும். அதையும் பிளமிங் செய்யவில்லை என்று புகார்களை அடுக்குகிறார். முக்கியமாக தோனி ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் அதை எந்த கேள்வியும் கேட்காமல் பிளமிங் பின்பற்றி இருக்கிறார். ஒரு பயிற்சியாளராக பிளமிங் அணிக்குள் பெரிய அழுத்தம், மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை.

இதற்கு முன்

இதற்கு முன்

இதற்கு முந்தைய சீசன்களில் பிளமிங் இப்படி இருந்தது இல்லை. ஆனால் இந்த சீசனில் பிளமிங் பயிற்சி அளிக்க விருப்பமே இல்லாதவர் போல செயல்படுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. எல்லாம் போக ஒவ்வொரு போட்டிக்கும் பின்பாக மிகவும் நெகட்டீவாக இவர் பேசுகிறார். மும்பைக்கு எதிராக முதல் பவர் பிளேவிலேயே சிஎஸ்கே தோல்வி அடையும் என்று எங்களுக்கு தெரியும் என்று பிளமிங் கூறியுள்ளார்.

தோல்வி

தோல்வி

சிஎஸ்கேவின் தோல்வி முதல் 5 ஓவரிலேயே முடிவாகிவிட்டது என்று பிளமிங் கூறியுள்ளார். பிளமிங் இப்படி ஆர்வமே இல்லாமல், எதிர்மறையாக பேசுவது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தோல்வியை எதிர்கொண்டுதான் இவர் ஒவ்வொரு போட்டிக்கும் வருகிறார் போல.. இவர் வாயில் இருந்து நல்ல விஷயமே வராதா? என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர் முதலில் பிளமிங்கை மாற்ற வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே சரியாகும் என்று கூறியுள்ளனர்.

Story first published: Sunday, October 25, 2020, 14:52 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
IPL 2020: Fleming should take equal responsibility for the fall of Great CSK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+