Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவிற்கு திடீர் ஆதரவு.. சீனுக்குள் வந்த கங்குலி.. கோலிக்கு வைக்கப்படும் செக்.. திருப்பம்!

துபாய்: ஐபிஎல் தொடரில் தற்போது ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியா அனுப்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் ரோஹித் சர்மா கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகவில்லை. ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் மாதம் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

இந்த தொடரில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெறவில்லை.

கங்குலி

கங்குலி

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தற்போது ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியா அனுப்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள். பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்துள்ள பேட்டி இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. கங்குலி தனது பேட்டியில், ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள தொடர் கண்டிப்பாக இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் நிறைய வலிமையான வீரர்கள் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது என்பது கடினம்தான். ஸ்மித், வார்னர், மார்னஸ் என்ற முக்கியமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இந்த தொடர் சுவாரசியமாக இருக்க போகிறது. இரண்டு அணிக்கும் இந்த தொடர் முக்கியமானதாகும்.

இரண்டு அணிகள்

இரண்டு அணிகள்

இரண்டு அணிக்கும் 50-50 வாய்ப்பு இருக்கிறது. அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதே முக்கியம். ஆஸ்திரேலிய பிட்ச் இப்போதெல்லாம் பவுலிங் செய்ய வசதியாக உள்ளது. பேட்டிங் நன்றாக செய்தால் வெற்றிபெறலாம்.

யார் வருவார்

யார் வருவார்

இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மா உடல்நிலையை சோதனை செய்து வருகிறோம். இஷாந்த் சர்மா இன்னும் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். விரைவில் அறிவிப்பு வரும்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா பிட்னஸை திரும்ப பெற வேண்டும். ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அவர் பிட்னஸை நிரூபிக்க வேண்டும். அவர் பிட்டாக இருந்தால் அணியில் எடுப்போம். கண்டிப்பாக எடுப்போம். தொடருக்கு இடையில் அணியில் எடுப்போம். தொடருக்கு இடையில் அணியில் எடுத்து.. அவரை ஆஸ்திரேலியா அனுப்பி வைப்போம், என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

கோலி

கோலி

இதன் மூலம் ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணிக்குள் திரும்புவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. தொடரில் ஒன்றிரண்டு போட்டிகளை மட்டுமே இவர் ஆட மாட்டார் என்கிறார்கள். அவருக்கு காயமும் வேகமாக குணமாகி வருகிறது. இது கோலிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரோஹித் வந்தால் துணை கேப்டன் பதவியை ராகுல் இழக்க நேரிடும். அணியில் மீண்டும் ரோஹித் ஆதிக்கம் அதிகம் ஆகும்.

கேப்டன்

கேப்டன்

அதேபோல் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக முயன்று கொண்டு இருக்கிறார். உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் முயன்று கொண்டு இருக்கிறார். ரோஹித் அணிக்குள் கம்பேக் கொடுத்தால்.. அது கோலிக்கு சிக்கலாக முடியும் என்கிறார்கள்.

Story first published: Tuesday, November 3, 2020, 21:06 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+