ஏன் இந்த கோபம்.. நீங்கள் செய்தது பெரிய தவறு.. "பாஸ்" கெயிலுக்கு ஐபிஎல் வைத்த செக்.. என்ன நடந்தது?
துபாய்: நேற்று களத்தில் மிகவும் கோபமாக நடந்து கொண்ட பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் மீது ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத் இடையே பிளே ஆப் செல்வதற்கான மோதல் கடுமையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது. நேற்று முதலில் இறங்கிய பஞ்சாப் 185 ரன்கள் எடுக்க 17.3 ஓவரில் ராஜஸ்தான் அணி 186 ரன்கள் எடுத்து வென்றது.

வெற்றி
நேற்று பஞ்சாப் அணி சார்பாக மூத்த வீரர் கிறிஸ் கெயில் சிறப்பாக ஆடினார். மூன்றாவது முறையாக நேற்று மீண்டும் அரை சதம் அடித்தார். அதோடு நேற்றுதான் 1001 சிக்ஸ் என்ற மைல் கல்லை எட்டினார்.

சதம்
நேற்று சதம் அடிக்கலாம் என்ற திட்டத்தோடுதான் கெயில் மைதானத்திற்கு வந்தார். ஆனால் கடைசியில் 99 ரன்கள் எடுத்த போது ஆர்ச்சர் பந்தில் அவுட்டானார். இந்த விக்கெட்டை எதிர்பார்க்காத கெயில் கோபமாக பேட்டை தூக்கி வீசினார்.

பேட்டை வீசினார்
வேகமாக பேட்டை தரையில் அடித்தார். அதன்பின் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஆர்ச்சருக்கு கை கொடுத்துவிட்டு.. கெயில் வெளியேறினார். ஆனால் விதிப்படி கெயில் இப்படி பேட்டை தூக்கி எறிந்தது தவறு. இதனால் களத்தில் இருந்த நடுவர்கள் கெயில் மீது புகார் வைத்தனர்.

புகார்
கெயில் நடந்து கொண்டது விதிமீறல். இது லெவல் 1 விதிமீறல் என்று புகார் வைத்து உள்ளனர். இந்த விதிமீறல் காரணமாக தற்போது கெயிலின் சம்பளத்தில் இருந்து 10% சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனிமேல் இப்படி நடக்க கூடாது என்று இவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications