Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயமெல்லாம் ஆறிடுச்சு... ரொம்ப நல்லா இருக்கேன்... போட்டியில் மீண்டும் பங்கேற்ற ரோகித் சர்மா

ஷார்ஜா : நேற்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 4 போட்டிகளில் பங்கேற்காத மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நேற்றைய போட்டியில் பங்கேற்றார்.

இந்நிலையில், தன்னுடைய காயம் ஆறிவிட்டதாகவும் தான் நலமுடன் இருப்பதாகவும் போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி

ஐபிஎல்லின் இறுதி லீக் போட்டி நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்று நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போட்டிகளில் விளையாடாத ரோகித்

போட்டிகளில் விளையாடாத ரோகித்

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 4 போட்டிகளில் விளையாடாமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய தினம் போட்டியில் கலந்து கொண்டார். இந்த காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் தேர்வாகாதது குறிப்பிடத்தக்கது.

கங்குலி, ரவிசாஸ்திரி அறிவுரை

கங்குலி, ரவிசாஸ்திரி அறிவுரை

அவர் தன்னுடைய காயத்திற்கு சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க அவசரப்படக் கூடாது என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் இந்திய அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி ஆகியோர் அறிவுறுத்தியிருந்த நிலையில், அவர் நேற்றைய போட்டியில் பங்கேற்றுள்ளார்.

போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சி

போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சி

இந்நிலையில், தன்னுடைய காயத்திலிருந்து தான் தேறியுள்ளதாகவும் தான் நலமுடன் இருப்பதாகவும் நேற்றைய போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மீண்டும் போட்டிகளில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அடுத்ததாக வரவுள்ள போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த போட்டியில் கவனம்

அடுத்த போட்டியில் கவனம்

நேற்றைய 10 விக்கெட்டுகள் வித்தியாச தோல்வி குறித்து பேசிய ரோகித் சர்மா, இந்த சீசனிலேயே மும்பை இந்தியன்ஸ் ஆடியுள்ள மிகவும் மோசமான போட்டி என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த போட்டியை மறந்துவிட்டு அடுத்த போட்டியில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, November 4, 2020, 10:29 [IST]
Other articles published on Nov 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+