Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கேப்டன்.. என்னால் ஓடி ஒளிய முடியாது.. ரெய்னாவை வெளிப்படையாக சீண்டிய தோனி.. பரபர சம்பவம்!

துபாய்: நான் எங்கும் செல்ல மாட்டேன், அடுத்த மூன்று போட்டிகளில் கண்டிப்பாக ஆடுவேன் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

Raina-வை வெளிப்படையாக சீண்டிய Dhoni?

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான தொடராக மாறியுள்ளது. இந்த சீசனில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது. நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பேட்டி

பேட்டி

இந்தநிலையில் நேற்று தோனி கொடுத்த பேட்டியில், அடுத்த வருட சீசனுக்கு நாங்கள் தயாராக வேண்டும். அடுத்த வருடம் குறித்து தெளிவான பார்வை எங்களுக்கு இருக்க வேண்டும். எப்படி ஏலம் நடக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

எங்கே தொடர்

எங்கே தொடர்

எங்கே தொடர் நடக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் இளைஞர்களுக்கு விளையாடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். அவர்களின் திறமையை வெளியே கொண்டு வரும் வகையில் செயல்பட வேண்டும்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

அடுத்த மூன்று போட்டிகளில் நாங்கள் நன்றாக ஆட வேண்டும். இதன் மூலம் அடுத்த வருடத்திற்கு தயார் ஆக வேண்டும். புதிய பவுலர்களையே கண்டுபிடிக்க வேண்டும். டெத் ஓவர்களில் எதிரணியை வீழ்த்த கூடிய பவுலர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் பிரஷர் கொடுக்க கூடிய பவுலர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் அடுத்த மூன்று போட்டிகளிலும் ஆடுவேன். நான் எங்கும் செல்ல மாட்டேன். பாதியில் கேப்டன்கள் ஓடி ஒளிய முடியாது. நான் இனி நடக்கும் எல்லா போட்டிகளிலும் கண்டிப்பாக ஆடுவேன், என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

பிரஷர்

பிரஷர்

தோனி இதன் மூலம் ரெய்னாவை சீண்டி உள்ளார் என்று கூறுகிறார்கள். ரெய்னாதான் ஐபிஎல் தொடருக்கு முன் ஓடினார். அணியை கைவிட்டுவிட்டு ரெய்னாதான் சென்றார். ஹர்பஜனும் குடும்ப விஷயங்களை காரணம் காட்டி வெளியேறினார். தற்போது அதை தோனி குறிப்பிட்டு பேசி உள்ளார்.

அணியை விட்டு வெளியேறினார்

அணியை விட்டு வெளியேறினார்

வீரர்கள் எல்லாம் அணியை விட்டு சென்றுவிட்டனர். பிராவோ போன்ற முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். ஆனால் நான் வெளியேற முடியாது. நான் கேப்டன். இங்குதான் இருப்பேன், எங்கும் செல்ல மாட்டேன், என்று தோனி கெத்தாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, October 24, 2020, 12:35 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+