Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேகமாக ஓடி வந்த சாஹர்.. பார்த்ததும் ஏமாற்றம் அடைந்த தோனி.. அடுத்து தல என்ன செய்தார் தெரியுமா?

சார்ஜா: ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை கேப்டன் தோனி மற்றும் தீபக் சாஹர் இடையே சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற சென்னை, பவுலிங் தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் இருந்து அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, ரூத்துராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிலை என்ன

நிலை என்ன

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி சார்பாக இந்த போட்டியில் ஜெய்ஷ்வால் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் ஜெய்ஷ்வால் 18 வயதே நிரம்பியவர். மும்பையை சேர்ந்த இவர் 2.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணிக்கு எடுக்கப்பட்டார்.

ராஜஸ்தான் எப்படி

ராஜஸ்தான் எப்படி

இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் 6 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தார். சாஹர் ஓவரில் இவர் ஒரு பவுண்டரி எடுத்த நிலையில், அவுட்டானார். சரியாக ஜெய்ஷ்வாலுக்கு சாஹர் ஷார்ட் பால் போட்டார். இதை எதிர்கொள்ள முடியாமல் ஜெய்ஷ்வால் பேட்டை சுற்றினார்.

மேலே சென்றது

மேலே சென்றது

சரியாக பால் மேலே சென்றதும், அதை பிடிக்க தோனி வேகமாக ஓடி வந்தார். தோனிக்கு அருகில்தான் பந்து இருந்தது. இதனால் இதை பிடிக்க வேகமாக அவர் ஓடி வந்தார். ஆனால் இன்னொரு பக்கம் சாஹர் கேட்ச் பிடிக்க வேகமாக வந்தார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் சாஹர் வேகமாக வருவதை பார்த்துவிட்டு கடைசி நொடியில், கேட்ச் பிடிக்காமல் தோனி விலகி சென்றார். சாஹர் வந்ததை பார்த்தும் தோனி முகத்தில் கொஞ்சம் ஏமாற்றத்தை காட்டினார். சாஹர் மட்டும் அந்த பந்தை விட்டு இருந்தார், தோனி கண்டிப்பாக கோபம் அடைந்து இருப்பார்.

கேட்ச் பிடித்தார்

கேட்ச் பிடித்தார்

ஆனால் சாஹர் சரியாக அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இதை பார்த்ததும் தோனி உற்சாகம் அடைந்தார். சாஹரிடம் நேரடியாக சென்று சிரித்துக் கொண்டே பாராட்டினார். என்னை முந்திகிட்டு வந்து கேட்ச் பிடிச்சிட்டியா என்பது போல தோனி அவரிடம் சிரித்துக் கொண்டே பேசினார்.

Story first published: Tuesday, September 22, 2020, 20:33 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+