Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதே நினைப்போடு அங்கு வர வேண்டாம்.. ரோஹித் சர்மாவிற்கு விரிக்கப்படும் வலை.. என்ன செய்வார் ஹிட்மேன்?

துபாய்: ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மூத்த வீரர் ரோஹித் சர்மா இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடுத்த மாதம் பெரிய கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. ஐபிஎல் முடிந்து சில நாட்களில் நடக்கும் இந்த தொடர் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

தொடை

தொடை

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவர் பிட்டாக இல்லை என்று கூறி புறக்கணிக்கப்பட்டு உள்ளார். ஆனால் இவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

கேள்வி

கேள்வி

இவர் பிட்டாக இல்லை என்றால் எப்படி ஐபிஎல் போட்டிகளில் ஆடுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் இவர் ஏன் புறக்கணிக்கப்பட்டார். ஐபிஎல் போட்டியில் இவர் ஆட முடியும் போது, ஏன் ஆஸ்திரேலியா தொடரில் இவர் இடம்பெறவில்லை என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பதிலடி

பதிலடி

இதற்கு பதில் அளித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ரோஹித் சர்மா முழுமையாக பிட்டாக இருக்கிறார் என்று கூற முடியாது. ஐபிஎல் பிட்னசும், சர்வதேச தொடருக்கான பிட்னசும் வேறு, வேறு. ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடுகிறார் என்பதால் சர்வதேச தொடரில் நன்றாக ஆடுவார் என்று சொல்ல முடியாது.

கவனித்து வருகிறார்

கவனித்து வருகிறார்

தற்போது அவரின் உடலில் காயம் இருப்பதாக அறிகுறி எதையும் கொண்டு இருக்கவில்லை. அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம், என்று கூறியுள்ளார். இன்னொரு கிரிக்கெட் விமர்சகர் இது குறித்து தெரிவித்துள்ள, கருத்தில் ஐபிஎல்லில் ஆடும் நினைப்பில் சர்வதேச தொடரிலும் ஆட வேண்டும் என்று ரோஹித் நினைக்க கூடாது .

வேறு வேறு

வேறு வேறு

இரண்டு வேறு மாதிரியானது. அதனால் ரோஹித் சர்மா முழுமையாக உடல்நலம் பெற வேண்டும். முழுமையாக பிட்னஸை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும், என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெற என்ன செய்வார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, November 8, 2020, 13:53 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+