Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை விட்டால் நமக்குதான் சிக்கல்.. திடீரென ஓரம்கட்டப்பட்ட ரோஹித்..கோலி முடிவிற்கு இப்படி ஒரு காரணமா?

துபாய்: இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாமல் போனதற்கு பின் அவரின் காயம் மட்டும் காரணம் இல்லை, இன்னும் சில காரணங்களும் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆட உள்ளது.

இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் நேற்று மதியத்தில் இருந்து இரவு வரை நடந்தது. இதன் பின் நேற்று இரவு டெஸ்ட், ஒருநாள், டி 20 அணிகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

எப்படி

எப்படி

பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் ஆட்டத்தை வைத்து இந்த ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடிய நடராஜன் , வாஷிங்டன் சுந்தர் , வருண் சக்ரவர்த்தி என்று பெரும்பாலான வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளனர். சைனி போன்ற பெங்களூர் அணிக்காக விளையாடும் வீரர்களும் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் இந்திய அணியில் இந்த முறை ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. மூன்று அணியிலும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாகவும், தசை பிடிப்பு காரணமாகவும் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவரின் நீக்கத்திற்கு உண்மையில் காயம்தான் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் சர்மா அதிக உடல் எடை காரணமாக கொஞ்சம் கஷ்டப்பட்டு வருகிறார். இந்திய அணியில் ஆட குறிப்பிட்ட உடல் எடை மட்டுமே இருக்க வேண்டும். இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் உடல் பிட்டாக இருக்கிறதா என்று சோதனை செய்ய பிசிசிஐ பிஸியோ குழு முடிவு செய்துள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அவரின் காயத்தை சோதனை செய்யும் போதே அவரின் உடல் எடையையும் சோதனை செய்ய உள்ளனர். இந்த ரிப்போர்ட் வந்த பின் ரோஹித் அணிக்குள் திரும்ப வாய்ப்புகள் உள்ளது.ரோஹித் காயம் எல்லாம் நவம்பரில் சரி ஆகிவிடும், அவர் பிளே ஆப்பில் ஆடுவார் என்று கூறப்படுகிறது. . இன்னொரு பக்கம் கோலிதான் வேண்டும் என்றே ரோஹித்தை புறக்கணிக்கிறார் என்று கூறுகிறார்கள். ரோஹித் மிக சிறப்பாக ஆடி வந்தாலும், அவருக்கு டெஸ்ட் அணியில் கோலி வாய்ப்பு வழங்கவே இல்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

டெஸ்ட் அணியில் எங்கே தன்னுடைய இடம் காலி ஆகிவிடுவமோ என்று கோலி ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கவே இல்லை. சில போட்டிகளில் மட்டுமே ரோஹித்திற்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஒருநாள் அணியில் இருந்தும் காயத்தை காரணம் காட்டி ரோஹித் சர்மாவை கோலி நீக்கி உள்ளார். இதனால் ரோஹித் சர்மாவை கோலி ஓரம் கட்ட பார்க்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

கேப்டன்

கேப்டன்

ரோஹித் சர்மாதான் அடுத்த இந்திய கேப்டனாக இருக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு.. கேப்டன்சிக்காக லைனில் இருக்கும் ராகுல் , ஷ்ரேயாஸ் ஆகியோரை கோலி உள்ளே கொண்டு வந்துள்ளார். அதேபோல் ரோஹித்திற்கு நெருக்கமான இஷான் கிஷான், ராகுல் சாகர், குர்னால் பாண்டியா, சூர்யா குமார் யாதவ் என்று இளம் வீரர்களுக்கு கோலி வாய்ப்பு வழங்கவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

இவர்கள் எல்லாம் மும்பை அணியில் உள்ளனர். இதனால் அவர்களையும் கோலி புறக்கணித்து இருக்கிறார். இதனால்தான் ஒருவேளை ரோஹித் சர்மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட கோலி திட்டம் போடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ரோஹித் ஆதிக்கத்தை காலி செய்ய நினைக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

உலகக் கோப்பை தொடரின் போதும் கூட இதே மோதல் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்தது. கோலி அந்த தொடரில் செஞ்சுரி அடிக்க முடியாமல் திணறினார். அவரின் கேப்டன்சி சரி இல்லை என்றும் புகார் வைக்கப்பட்டது. அப்போதே ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இப்போது ரோஹித் சர்மா அணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார் .

Story first published: Tuesday, October 27, 2020, 13:50 [IST]
Other articles published on Oct 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+