Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகள் சாராவுடன் காதலா? நேற்று களத்தில் நடந்த அந்த சம்பவம்.. சர்ச்சையில் இளம் இந்திய வீரர்!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுடன் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கருதப்படும் இளம் வீரர் ஒருவர் காதலில் இருப்பதாக செய்திகள் வர தொடங்கி உள்ளது. நேற்று நடந்த சம்பவம் ஒன்று இந்த சர்ச்சையை அதிகப்படுத்தி உள்ளது.

நேற்று மும்பைக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் அபுதாபியில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. ஆனால் கொல்கத்தா அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டும் மிக மோசமாக இருந்தது.

இதனால் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் கொல்கத்தா மோசமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றுதான் தற்போது வைரலாகி உள்ளது.

என்ன சம்பவம்

என்ன சம்பவம்

இந்த போட்டியில் மும்பை பேட்டிங் செய்த போது, மூன்றாவது ஓவரில் கொல்கத்தா வீரர் சுப்மான் கில் பீல்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது மும்பை வீரர் சூர்யா குமார் யாதவ் அடித்த பந்து ஒன்றை டைவ் அடித்து சுப்மான் கில் பிடித்தார். இதுதான் சர்ச்சையாகி உள்ளது. இதில் சர்ச்சையாக என்ன இருக்கிறது என்று கேட்கலாம்.

சாரா

சாரா

இந்த புகைப்படத்தை நேற்று சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா பகிர்ந்து உள்ளார். இந்த புகைபடத்தை தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பகிர்ந்த சாரா டெண்டுல்கர், அதில் ஹார்ட்களை இட்டு உள்ளார். சரியாக சுப்மான் கில் இருக்கும் பிரேமை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை ஹார்ட் எமோஜி உடன் பகிர்ந்து உள்ளார். இதனால் சாரா தற்போது சுப்மான் கில் உடன் காதலில் இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சை ஏன்?

சர்ச்சை ஏன்?

ஒரே ஒரு போட்டோவை பகிர்ந்தால் அது காதல் ஆகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் இதற்கு முன்பே இப்படி இரண்டு முறை நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன் சாரா தனது புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ''I Spy'' என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார். அதேபோல் சுப்மான் கில்லும் தனது பக்கத்தில் செய்தார்.

சுப்மான் கில் எப்படி

சுப்மான் கில் எப்படி

சுப்மான் கில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு மேல் இதே ''I Spy'' என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார். அதன்பின் இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் போஸ்ட்களை மாறி மாறி ஹார்ட் விட்டனர். இதெல்லாம் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

சந்தேகம் ஏன் ?

சந்தேகம் ஏன் ?

இந்த நிலையில் நேற்று போட்டியின் புகைப்படத்தை சாரா பகிர்ந்து இருப்பதுதான் சர்ச்சையை அதிகரித்து உள்ளது.. வளரும் இளம் வீரருக்கு இதெல்லாம் தேவையா என்று சிலர் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். இன்னொரு பக்கம், அவர்களுக்கு விருப்பம் இருந்தால் டேட்டிங் செய்யலாம் இதில் என்ன தவறு என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

Story first published: Thursday, September 24, 2020, 16:45 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+