Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் அப்படி ஓடினார்?.. சந்தேகம் தருகிறது.. சூப்பர் ஓவருக்கு முன் நடந்த அந்த சம்பவம்..ஆடிப்போன பஞ்சாப்

துபாய்: நேற்று பஞ்சாப் அணியின் வீரர் ஜோர்டன் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடிய விதம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு போட்டி நடந்தது இல்லை என்று கூறும் அளவிற்கு கடைசி நொடி வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

ஒரு முறை போட்டி டை ஆகி, மீண்டும் சூப்பர் ஓவரில் ஆட்டம் டை ஆகி கடைசியில் மீண்டும் இரண்டாவது சூப்பர் ஓவர் போடும் அளவிற்கு கடைசிவரை போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்து இருந்தது. அதன்பின் அதை சேஸ் செய்த பஞ்சாப் அணி 176 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. அதன்பின் முதல் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 5 ரன்கள் எடுத்தது. ஆனால் மீண்டும் மும்பை அணி 5 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரையும் டிரா செய்தது.

மீண்டும்

மீண்டும்

இதன் காரணமாக மீண்டும் சூப்பர் ஓவர் போடப்பட்டது. இதில் மும்பை அணி 11 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணி அதை அதிரடியாக எடுத்து வெற்றிபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர் ஜோர்டன் கடைசி பந்தில் ரன் எடுக்க ஓடிய விதம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் நேற்று சரியாக ஓடி இருந்தால் கடைசியில் சூப்பர் ஓவர் வரை ஆட்டமே சென்று இருக்காது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று பஞ்சாப் பேட்டிங் செய்த கடைசி ஓவரில் 9 ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் டிரெண்ட் போல்ட் பவுலிங் செய்தார். பஞ்சாப் சார்பாக ஜோர்டன் பேட்டிங் செய்தார். கடைசி பந்தை லெக் திசையில் அடித்துவிட்டு ஜோர்டன் வேகமாக ஓடினார். சிங்கிள் எடுத்தவர்.. இரண்டாவது ரன்னை ஒழுங்காக ஓடி இருந்தால் பஞ்சாப் வென்று இருக்கும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இரண்டாவது ரன்னை அவர் நேராக ஓடாமல் வளைந்து சென்று,அருகில் இருந்த பிட்ச்சிற்கு ஓடி, சுற்றி சுற்றி வந்தார். நேரடியாக சென்று இருந்தால் எளிதாக கிரீஸை அடைந்து இருக்கலாம். ஆனால் ஜோர்டன் தவறாக சுற்றி சுற்றி ஓடினார். இதன் காரணமாகவே அவர் கடைசியில் இரண்டு ரன் அடிக்காமல் முடியாமல் ரன் அவுட் ஆனார். இதுதான் சூப்பர் ஓவருக்கும் வித்திட்டது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஜோர்டன் இப்படி ஓடியது சந்தேகம் தருவதாக நெட்டிசன்கள் பலர் வேதனை தெரிவித்து உள்ளனர். அவர் ஓடியது சரியில்லை. அவுட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர் ஓடியது போல தெரிகிறது.இதில் எதோ தவறு உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளனர். இன்னும் சிலர் அவர் பதற்றத்தில் இப்படி பக்கத்து பிட்சில் ஓடி விட்டார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, October 19, 2020, 9:21 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+