
எத்தனை ரன்கள்
இந்த போட்டியில் நேற்று ரூத்துராஜ் அதிரடியாக ஆடி 49 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். களத்தில் இப்படி அதிரடியாக ஆடிய ரூத்துராஜ்.. பஞ்சாப் வீரர் ரவி பிஸ்னோய் பவுலிங்கில் நேற்று அவுட்டாகி இருக்க வேண்டியது. ஆனால் நடுவர் இவருக்கு அவுட் கொடுக்கவில்லை.

அவுட் இல்லை
ரவி பிஸ்னோய் ஓவரில் ரூத்துராஜ் அடித்த பந்தை பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் இருந்த மன்தீப் சிங் கேட்ச் பிடித்தார். இவர் பிடித்த கேட்சிற்கு களத்தில் இருந்த நடுவர் விக்கெட் என்று சாப்ட் சிக்னல் கொடுத்தார். ஆனால் சந்தேகம் இருந்த காரணத்தால் மூன்றாவது நடுவரிடம் விக்கெட்டா என்று சோதனை செய்தார். இதை மூன்றாவது நடுவர் சோதனை செய்துவிட்டு விக்கெட் இல்லை என்றார்.

விக்கெட் இல்லை
பந்து லேசாக தரையில் உரசியது போல இருந்த காரணத்தால் பேட்ஸ்மேனுக்கு ஆதரவாக மூன்றாவது நடுவர் முடிவு எடுத்தார் . இதனால் கே. எல் ராகுல் கடுமையாக கோபம் அடைந்தார். அதேபோல் பயிற்சியாளர் கும்ப்ளேவும் கோபம் அடைந்தார். இவர்கள் இருவரும் போட்டி முழுக்க கோபமாக இருந்தனர்.

கிண்டல்
இதற்கு அடுத்து டு பிளசிஸ் கே. எல் ராகுலிடம் எளிதாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மிக சாதாரணமாக கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் இதைவேண்டுமென்றே கே . எல் ராகுல் சர்ச்சையாக்கினார். 3 வது நடுவரை நோக்கி திரும்பி.. விக்கெட்டா என்று கேட்டு நடுவரை கிண்டல் செய்தார். சாதாரண கேட்ச் பிடித்துவிட்டு.. அதை மூன்றாவது நடுவரிடம் ராகுல் சோதித்தார்.

மோசம்
3வது நடுவரின் தவறான முடிவுகளை கிண்டல் செய்யும் விதத்தில் ராகுல் செயல்பட்டார். ராகுலின் இந்த செயல் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. மூன்றாவது நடுவரை இவர் களத்தில் கிண்டல் செய்தது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications