Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்குதான் காத்திருந்தேன்.. ஐபிஎல்லுக்காக இப்படி ஒரு வீடியோவா.. அடுத்தடுத்து குஷ்பு செய்த டிவிட்ஸ்!

சென்னை: ஐபிஎல் போட்டி நாளை நடக்க உள்ள நிலையில் இது தொடர்பாக நடிகை குஷ்பு செய்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 200 நாட்களாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. கொரோனாவிற்கு இடையே இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சிறிய சிறிய தொடர்களை நடத்தினாலும் கூட, எதுவும் பெரிய அளவில் உலகம் முழுக்க வைரலாகவில்லை.

இந்த நிலையில்தான் உலகம் முழுக்க பிரபலமான ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டியாக பார்க்கப்படும் ஐபிஎல் நாளை அபுதாபியில் தொடங்குகிறது.

அபுதாபி போட்டி

அபுதாபி போட்டி

சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையில் முதல் போட்டி நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக மும்பை, சென்னை இரண்டும் பார்க்கப்படுகிறது. 200 நாட்களுக்கு பின் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே இரண்டு ஜாம்பவான் அணிகள் மோதுவது பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பிரபலங்கள் டிவிட்

பிரபலங்கள் டிவிட்

இந்த ஐபிஎல் தொடர் குறித்து வரிசையாக பிரபலங்கள் பலர் டிவிட் செய்து வருகிறார்கள். அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்புவும் அடுத்தடுத்து நிறைய டிவிட் செய்து வருகிறார். சென்னை அணிக்கு இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன் மீண்டும் திரும்பி இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை முடித்துக் கொண்டு இவர் அபுதாபி சென்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது.

குஷ்பு பகிர்ந்தார்

இந்த போட்டோக்களை குஷ்பு மிகவும் சந்தோசமாக பகிர்ந்து உள்ளார். அதோடு இன்னொரு பக்கம் இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஐபிஎல் தொடரின் தீம் சாங்கை இவர் பகிர்ந்து இருக்கிறார். ஆனால் அதில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. தில்லானா மோகனாம்பாள் பட காட்சியை வைத்து இந்த வீடியோவை எடிட் செய்துள்ளனர். இந்த வீடியோ பார்க்கவே செம மாஸ்ஸாக உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதை குஷ்பு பகிர்ந்து மிகவும் உற்சாகமாக டிவிட் செய்துள்ளார். நாளைக்காக காத்து இருக்கிறேன்.. சென்னை அணிக்கும் எம்எஸ் தோனிக்கும் பெரிய விசில் போடுங்க என்று டிவிட் செய்துள்ளார். குஷ்பு தீவிரமான சிஎஸ்கே ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 18, 2020, 22:51 [IST]
Other articles published on Sep 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+