Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு

அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் எடுத்த முடிவு ஒன்று பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மும்பை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது.

எப்படி போட்டி

எப்படி போட்டி

இந்த போட்டியில் முதலில் இறங்கிய சுப்மான் கில் மோசமாக ஆடினார். முதல் ஓவர் முழுக்க அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அதன்பின் கொஞ்சம் அடித்து ஆட தொடங்கிய சுப்மான் வெறும் 7 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் ராணா களமிறங்குவார் என்று கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒன் டவுன் இடத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். வந்ததில் இருந்து கொஞ்சம் நிதானமாகவும், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும் ஆடினார். இதனால் கொல்கத்தா ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. தினேஷ் கார்த்திக் 3ம் இடத்தில் இறங்கி மொத்தமாக போட்டியை மாற்றவில்லை. 30 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார்.

பாராட்டு துவங்கினார்கள்

பாராட்டு துவங்கினார்கள்

ஆனாலும் தினேஷ் கார்த்திக்கை எல்லோரும் பாராட்ட தொடங்கி உள்ளனர், ஒரு கேப்டன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். துணிச்சலாக களமிறங்கி ஆட வேண்டும். பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு ஆட வேண்டும். அதை தினேஷ் கார்த்திக் செய்கிறார். இதனால் தற்போது தோனியை கிரிக்கெட் வல்லுநர்கள் , விமர்சகர்கள் சிலர் இணையத்தில் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். அதில் தினேஷ் கார்த்திக் போல தோனி செய்யவில்லை.

துணிச்சல் முக்கியம்

துணிச்சல் முக்கியம்

சிஎஸ்கே அணிக்கு ராஜஸ்தான் 216 ரன்கள் எடுத்த போது, தோனி துணிச்சலாக களமிறங்கவில்லை. தோனி 7வது இடத்தில் இறங்கியது தவறு. தினேஷ் கார்த்திக் 30 ரன்கள்தான் எடுத்து அவுட்டானார். ஆனால் அவர் களமிறங்கி விக்கெட் விழுவதை தடுத்தார். அவரை போல தோனியும் நேற்று துணிச்சலாக செயல்பட்டு இருக்கலாம் என்று வல்லுநர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆதரவு குரல்

ஆதரவு குரல்

ஆனால் இன்னொரு பக்கம் தோனிக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள். தோனி ரிட்டயர்மெண்ட் காலத்தில் இருக்கிறார். அதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கிறார். அதனால் தாமதமாக இறங்குகிறார். அவர் மனது மனது வைத்தால் எங்கு வேண்டும்னாலும் இறங்கி ஆட கூடியவர். நேற்று கடைசியில் அந்த ஹாட் ட்ரிக் சிக்ஸ்தான் இதற்கு உதாரணம்.

ஒப்பீடு சரியில்லை

ஒப்பீடு சரியில்லை

தினேஷ் கார்த்திகை தோனியோடு ஒப்பிடுவது சரியில்லை. டிகே அவுட்டானால் அவருக்கு அடுத்து ஆட ராணா, ரசல், இயான் மோர்கன் போன்ற பெரிய படை உள்ளது. ஆனால் சிஎஸ்கேவில் அப்படி இல்லை. இதனால் தோனிக்கு கடைசியில் ஆடுவதை தவிர வேறு வழி இல்லை. அவர் செய்தது தவறு இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, September 23, 2020, 23:01 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+