Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பேர் அவுட்.. தோனியும் இல்லை.. ஐபிஎல்லுக்கு இடையே சிக்கலில் மாட்டிய ரோஹித், கோலி.. பரபர பின்னணி!

துபாய்: ஐபிஎல் போட்டிக்கு இடையே இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் இருவரும் முக்கியமான சிக்கல் ஒன்றில் மாட்டி உள்ளனர்.

கொரோனாவிற்கு இடையே உலகத்திலேயே நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு தொடராக ஐபிஎல் உருவெடுத்து உள்ளது. பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்து ஐபிஎல் போட்டிகளில் ஆடுகிறார்கள்.

1 வருடத்திற்கு பின் இப்போது கிரிக்கெட் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பார்ம் இழந்து தவித்த வந்த கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் பார்ம் பெறுவதற்கு ஐபிஎல் தொடர் களம் அமைத்து கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. டிசம்பர் தொடக்கத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது.

ஒரு வருடம்

ஒரு வருடம்

ஒரு வருடம் கழித்து இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆட உள்ளது. அதிலும் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஆனால் இங்குதான் இந்திய அணிக்கு மூன்று முக்கிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

சிக்கல் என்ன

சிக்கல் என்ன

ஐபிஎல் போட்டிக்கு இடையே இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் இருவரும் இந்த சிக்கலில் மாட்டியுள்ளனர்.

சிக்கல் 1 - அணியில் தற்போது தோனி இல்லை. அவரின் இடத்தை நிரப்ப வேண்டும்.

சிக்கல் 2- புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஆடவில்லை. அவர்களின் இடத்தை நிரப்ப வேண்டும்.

சிக்கல் 3 - டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவின் இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருப்பதால் அவரின் இடத்தில் யார் ஆட போவது என்பதை தீர்மானிக்க முடியாமல் ரோஹித் சர்மா, கோலி இருவரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தினேஷ் கார்த்திக், பண்ட், கே. எல் ராகுல், இஷான் கிஷான் என்று பெரிய குழுவே கீப்பிங் செய்ய தயாராக உள்ள நிலையில் இந்திய அணி யாரை தேர்வு செய்யும் என தெரியவில்லை.

யார் வருவார்

யார் வருவார்

அதேபோல் இன்னொரு பக்கம் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மாவிற்கு மாற்று யார் என்று தெரியவில்லை. பாண்டியாவும் ஓவர் போட போவதில்லை. இதனால் சைனி, நடராஜன், சிராஜ், ஆகியோர் அணிக்குள் வருவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவின் இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டெஸ்ட் அணியில் ரோஹித்தை நிரந்தரமாக சேர்க்க கோலி விரும்பவில்லை. இதனால் அவரை டெஸ்ட் அணியில் இருந்து கடைசி நேரத்தில் கழற்றி விடவும் கோலி திட்டமிடலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, October 22, 2020, 16:41 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+