Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை மட்டும் குறி வைத்தார்.. கோலி செய்தது பெரிய "அப்யூஸ்".. கெட்ட பெயர் எடுத்த கிங்..யார் மீது தவறு?

துபாய்: நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி நடந்து கொண்ட விதம் தவறானது என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

நேற்று பெங்களூருக்கும் மும்பைக்கும் இடையில் நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. களத்தில் வீரர்களுக்கு இடையே நேற்று நிறைய முறை மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆட்டத்தின் கடைசி நொடி வரை யார் யாருடன் மோதுவார் என்று பதற்றம் நிலவிக் கொண்டே இருந்தது. அதிலும் கோலிக்கும் இளம் வீரர் சூர்ய குமார் யாதவிற்கு இடையே நடந்த மோதல் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

வைரல்

வைரல்

நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக சூர்ய குமார் யாதவ் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். மும்பை அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். களத்தில் நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் 43 பந்தில் 79 ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றிபெற வைத்தார்.

ஆனால் கோலி

ஆனால் கோலி

ஆனால் கோலி நேற்று சிறுபிள்ளை போல அடிக்கடி சூர்ய குமார் யாதவை சீண்டினார். 10 ஓவர் முடியும் முன்பே கோலியின் சீண்டல் தொடங்கிவிட்டது. சூர்ய குமார் அடிக்கும் பந்துகளை தடுக்கும் போதெல்லாம் கோலி பந்தை சூர்ய குமார் மீது வீசுவது போல செய்து காட்டினார். பல முறை சூர்ய குமார் யாதவை கோலி கடுமையாக முறைத்தார்.

முறைப்பு

முறைப்பு

அதோடு இன்னொரு பக்கம் சாஹல், மோரிஸ் போன்ற வீரர்களும் சூர்ய குமார் யாதவை முறைத்தனர். கோலி சொல்லி செய்தது போல.. அவரை மட்டும் தனியாக குறி வைத்தனர். சூர்ய குமார் பேட்டிங் செய்த போது பீல்டிங் செய்யப்பட்ட விதம் தொடங்கி, பவுலர்கள் அவரை பார்த்த விதம் வரை எல்லாமே அருவருக்கத்தக்க வகையில் இருந்தது.

அருவருப்பு

அருவருப்பு

அதிலும் கோலி நேற்று சூர்ய குமார் யாதவிடம் இரண்டு முறை அருகே சென்று முறைத்து பார்த்தார். இந்திய அணியின் கேப்டன் கோலி..அவர் போய் ஒரு இளம் வீரரிடம் இப்படி நடந்தது பெரிய அதிர்ச்சி அளித்தது. அதிலும் இந்திய அணிக்குள் இடம்பெற வேண்டும் என்று பல வருடமாக போராடும் ஒரு வீரரிடம் கோலி இப்படி செயல்பட்டது பலருக்கும் கோபத்தை வரவைத்தது.

சந்தேகம்

சந்தேகம்

சூர்ய குமார் இந்திய அணியில் வாய்ப்பு தேடினார். தனது திறமையை பேட்டிங் மூலம் நிரூபித்தார். இதில் எந்த தவறும் இல்லை. இதற்கு போய் கோலி அவரை சீண்டுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்திய அணியின் கேப்டனாக கோலி நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

மேட்ச் வின்னர்

மேட்ச் வின்னர்

ஆனால் சூர்ய குமார் நேற்று மிகவும் முதிர்ச்சியாக செயல்பட்டார். எந்த விதத்திலும் முகத்தில் கோபத்தை காட்டவில்லை. ஒரே ஒரு நிமிடம் கோலியை கூர்ந்து பார்த்தார். அதுவும் கூட கோலி தொடர்ந்து சீண்டியதால் அப்படி பதில் வினையாற்றினார். மற்றபடி சூர்ய குமார் நேற்று அரை சதம் அடித்த போது கூட கத்தி கூச்சல் போடவில்லை.. போட்டியில் வென்ற பின்பும் கூட ஆர்ப்பாட்டம் இன்றி அதை கொண்டாடினார்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

சூர்ய குமார் யாதவிடம் இருந்த முதிர்ச்சியில் கொஞ்சம் கூட கோலிக்கு இல்லை. அதிலும் நேற்று போட்டிக்கு பின் சூர்ய குமார் யாதவிற்கு கோலி தோளில் தட்டி பாராட்டு தெரிவித்து இருக்க வேண்டும். இந்திய கேப்டனாக கோலி அப்படி செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கோலி கொஞ்சம் கூட விளையாட்டு மனோபாவம் இன்றி திமிராக செயல்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

Story first published: Thursday, October 29, 2020, 10:28 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+