Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரிடம் பேசினோம்.. கோலி வெளியேறியதும் உள்ளே வந்த ரோஹித் சர்மா.. பிசிசிஐ சொன்ன பரபர தகவல்!

துபாய்: ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் மட்டும் இவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த தொடரில் விளையாட போகும் இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடிய விதத்தை வைத்து பல முக்கிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இதில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ரோஹித் சர்மா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்கு பிட்னஸ் இல்லை என்று கூறி இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் ரோஹித் சர்மா தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.மும்பை அணிக்காக இவர் தொடர்ந்து பேட்டிங் இறங்கி வந்தார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதனால் ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. ரோஹித் சர்மாவை வேண்டும் என்றே நீக்கிவிட்டார்களா என்று சந்தேகங்கள் எழுந்தது. இந்த நிலையில்.. ரோஹித் சர்மாவின் பிட்னஸ் குறித்து ஆராய்ந்து வருகிறோம், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பு தெரிவித்து இருந்தது.

முடிவு

முடிவு

தற்போது இந்திய அணியில் மீண்டும் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவிடம் முழுமையாக கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு எடுத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில்.. ரோஹித் சர்மா உடன் நாங்கள் பேசினோம், இதையடுத்து அவரை அணியில் எடுத்து இருக்கிறோம்.

ஒருநாள்

ஒருநாள்

ஆனால் அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இடம்பெறவில்லை. பிட்னஸ் காரணமாக அவர் இரண்டு தொடரிலும் ஆட மாட்டார். மாறாக அவருக்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ கூறியுள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து கோலி வெளியேறி உள்ளார். அவர் டெஸ்ட் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடுவார்.

ஏன்

ஏன்

கோலிக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் குழந்தை பிறக்க போகிறது என்பதால் கோலி டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் இருந்து வெளியேற உள்ளார். இந்த நிலையில் கோலி வெளியேறியதும்.. சரியாக இந்திய அணிக்குள் ரோஹித் சர்மாவை கொண்டு வருவது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கோலி இருக்கும் போது ரோஹித்தை ஏன் எடுக்கவில்லை என்று கேள்விகள் எழுந்துள்ளது.

இப்போதே

இப்போதே

இப்போதே ரோஹித் சர்மா பிட்டாக இருக்கிறார். இப்போதே அவர் மும்பை அணிக்காக ஆடுகிறார். அப்படி இருக்கும் போது, அவரை ஒருநாள், டி 20 தொடரில் இருந்து புறக்கணித்தது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது. கோலி அணியில் இருக்கும் போது ரோஹித்திற்கு வாய்ப்பு கொடுக்காமல்.. கோலி வெளியேறிய பின் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, November 9, 2020, 18:17 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+