Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர்களை எல்லாம் ஓரம்கட்டி.. மொத்தமாக காலி செய்த கோலி.. அதே பழைய தோனி டெக்னிக்.. அதிரடி முடிவு!

துபாய்: ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ஆர்பிசி வீரர்கள் பலர் இடம் பிடித்து உள்ளனர். அதேபோல் கோலிக்கு நெருக்கமான வீரர்கள் பலர் அணிக்குள் இடம் பிடித்து உள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 தொடர் நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் அணிகள் மூன்றுக்கும் கோலிதான் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், டி 20 அணியில் துணை கேப்டனாக கே. எல் ராகுல் செயல்படுவார்..

எப்படி

எப்படி

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய அணியில் முழுக்க முழுக்க கோலி ஆதரவாளர்களுக்கும், ஆர்சிபி அணியில் இருக்கும் வீரர்களுக்கும், முன்னாள் ஆர்சிபி வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய அணியை தற்போது கோலி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறார்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சாஹல், சைனி ஆகிய பெங்களூர் அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவ், சிராஜ், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்னொரு பக்கம் ஒருநாள் அணியிலும் சைனி , சாஹல், ஆகியோருக்கு ஆர்சிபி அணியில் இருந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேறு யார்

வேறு யார்

ஆர்சிபி அணி இல்லாமல் முன்னாள் ஆர்சிபி வீரர்கள், கோலிக்கு நெருக்கமான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோலிக்கு நெறுக்கமான மயங்க் அகர்வால், கே. எல் ராகுல், ஜடேஜா, குல்தீப், ஷர்தல், சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது . இதெல்லாம் விட கோலி பாராட்டிய ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

இதன் மூலம் இந்திய அணிக்குள் முழுக்க முழுக்க கோலியின் ஆதிக்கம்தான் அதிகரித்து உள்ளது. மும்பை அணியில் இருக்கும் இரண்டு வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் தேர்வாகி உள்ளனர். ஹர்திக் பாண்டியா, பும்ரா இரண்டு பேர் மட்டுமே இந்திய அணிக்குள் தேர்வாகி உள்ளனர். வேறு மும்பை வீரர்கள் யாருமே அணிக்குள் இடம்பிடிக்கவில்லை.

ஏன் சிக்கல்

ஏன் சிக்கல்

மும்பை அணியில் இந்த முறை இஷான் கிஷான், ராகுல் சாகர், சூர்யாகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார்கள்.அதேபோல் குர்னால் பாண்டியா நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் இவர்கள் யாரையும் கோலி அணிக்குள் எடுக்கவில்லை. சூர்யா குமார் யாதவ் இந்திய அணிக்குள் புறக்கணிக்கப்பட்டது தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது .

ராஜ்ஜியம்

ராஜ்ஜியம்

இதன் மூலம் மொத்தமாக இந்திய அணியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். கே. எல் ராகுலை துணை கேப்டனாக அறிவித்ததன் மூலம் இந்திய அணியில் தனக்கு பின் ராகுல்தான் என்பதை கோலி சொல்லாமல் சொல்லிவிட்டார். இதனால் இந்திய அணியின் ரோஹித் சர்மாவிற்கு இருந்த மதிப்பு வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்கிறார்கள்.

மோசம்

மோசம்

ஒரு காலத்தில் இந்திய அணியில் முழுக்க முழுக்க சிஎஸ்கே வீரர்கள் பலர் இருந்தனர். இந்திய அணியை முழுக்க முழுக்க தோனி தனது கட்டுப்பாட்டில்தான் வைத்து இருந்தார். தற்போது அதேபோல் கோலியும் முழுக்க முழுக்க தனக்கு ஆதரவான வீரர்களை மட்டும் அணிக்குள் எடுத்து, மொத்தமாக இந்திய அணியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

Story first published: Wednesday, October 28, 2020, 8:41 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+