பாவம் என்னதான் பண்ணுவான் அவன்.. போட்டியின் போதே மிகவும் உருக்கமான பேசிய "சீ.கா".. என்ன நடந்தது?
துபாய்: இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யாததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் தொடர் ஆட உள்ள இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை வீரர் சூர்யா குமார் யாதாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தொடர்ந்து மூன்று வருடமாக இவர் புறக்கணிக்கப்படுவது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில் தொடர் புறக்கணிப்புகளுக்கு நேற்று சூர்யா குமார் யாதவ் தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார். 43 பந்தில் 79 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியை நேற்று வீழ்த்தினார்.

கண்டனம்
இந்த நிலையில் இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யாததற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், நானாக இருந்தால் கண்டிப்பாக அணியில் எடுத்து இருப்பேன். ஐபிஎல்லை வைத்துதான் இந்த முறை இந்திய அணியை தேர்வு செய்துள்ளனர். கண்டிப்பாக இதனால் சூர்யாவை அணியில் எடுக்க வேண்டும். நிறைய போட்டிகளில் சூர்யா குமார் யாதவ் சிறப்பாக ஆடி இருக்கிறார்.

பாவம்
ஆனால் அவரை பாவம் அணியில் எடுக்கவே இல்லை. அவரும் எவ்வளவுதான் பண்ணுவார் . அவரும் எவ்வளவுதான் அடிப்பார். மும்பை அணிக்கு ஆடுகிறார், பல வருடமாக மும்பை அணியை வெற்றி பெற வைத்துள்ளார். பாவம் என்னதான் பண்ணுவான் அவன். வேறு என்னதான் பண்ணனும் அவன்.

பிரமாதம்
சூர்யா பேட்டிங் பிரமாதமாக இருக்குகிறது. எனக்காக அணியில் இடம் கொடுக்கவில்லை என்று சூர்ய குமார் ஆடிக்கொண்டு இருக்கிறார். தேர்வு குழுவிற்கு சொல்லிக்கட்டிக்கொண்டு இருக்கிறார். என்னை அணியில் எடுக்கவில்லையா? பாருங்க நான் எப்படி ஆடுகிறேன் என்று சூர்யா குமார் யாதவ் சொல்லிக் காட்டிக்கொண்டு இருக்கிறார்.

செம பேட்டிங்
எப்படி போட்டாலும் சூர்ய குமார் யாதவ் எல்லா திசையில் அடிக்கிறார். பாஸ்ட் பவுலர், லெக் ஸ்பின்னர், சாஹல், ஸ்டெயின் என்று எல்லோரையும் சூர்யா குமார் யாதவ் அடிக்கிறார். இவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

சரியாக செயல்படவில்லை
நான் தேர்வுக்குழுவில் இருந்தால் சூர்யா குமார் யாதவை அணியில் எடுத்து இருப்பேன். மணீஷ் பாண்டேவை விட சூர்யா குமார் யாதவைதான் நான் அணியில் எடுத்து இருப்பேன். மணீஷ் பாண்டேவை விட சூர்யாதான் சிறப்பாக ஆடி வருகிறார். தேர்வுக்கு குழு சரியாக செயல்படவில்லை, என்று கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications