For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன பண்ணிட்டு இருக்க? சாம் கரன் பேட்டிங்கின் போது.. கெட்ட வார்த்தையில் கத்திய இளம் வீரர்.. பின்னணி!

துபாய்: நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் வீரர் குர்ணால் பாண்டியா மைதானத்தில் கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் மும்பை எளிதாக வெற்றிபெற்றது. சிஎஸ்கே அணியின் முதல் 7 பேட்ஸ்மேன்கள் வரிசையாக 9 ஓவருக்குள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

மோசம்

மோசம்

நேற்று சிஎஸ்கே அணி களத்தில் மோசமாக திணறி வந்தது. இதனால் மும்பை வீரர்கள் பலரும் கூலாக பவுலிங் செய்தனர். ராகுல் சாகர் போன்ற வீரர்கள் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பேட்டிலேயே பந்தை தூக்கி தைரியமாக வீசினார்கள். ஆனால் இன்னொரு பக்கம் குர்ணால் பாண்டியா மட்டும் மைதானத்தில் கொஞ்சம் கோபமாக காணப்பட்டார்.

குர்ணால் பாண்டியா

குர்ணால் பாண்டியா

ஏனோ நேற்று போட்டி முழுக்க குர்ணால் பாண்டியா மைதானத்தில் கோபமாக காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே தொடக்கத்தில் பெரிய சரிவை சந்தித்தாலும் கூட கடைசி நேரத்தில் சாம் கரன், இம்ரான் தாஹிர் இருவரும் அணியை மீட்டனர். ஒரு பக்கம் சாம் பொறுமையாக 47 பந்தில் 52 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை சரிவில் இருந்து மீட்டார்.

அவமானம்

அவமானம்

இன்னொரு பக்கம் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி தாஹிர் 10 பந்தில் 13 ரன்கள் எடுத்தார் . இருவரும் சிஎஸ்கேவை பெரிய அவமானத்தில் இருந்து காப்பாற்றினர். இதில் சாம் கரன் விக்கெட்டை எடுப்பதில் மும்பை கவனமாக இருந்தது. அப்போது குர்ணால் பாண்டியா 17வது ஓவரை வீசினார். அவரின் ஓவரில் கொஞ்சம் ரன் சென்றது. முக்கியமாக இம்ரான் தாஹிர் கொஞ்சம் அதிரடியாக ஆடினார்.

பவுண்டரி

பவுண்டரி

அந்த ஓவரின் கடைசி பந்தை இம்ரான் பவுண்டரி அடித்தார்.தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்துவிட்டு தாஹிர் ஓடினார். அங்கு இருந்த இஷான் கிஷான் நினைத்து இருந்தால் பந்தை தடுத்து இருக்க முடியும். ஆனால் அவர் சரியாக பீல்டிங் செய்யாமல் பந்தை பவுண்டரிக்கு விட்டார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த குர்ணால் பாண்டியா.. நீ எப்படி பவுண்டரி விடலாம்.. என்ன செய்கிறாய் என்பது போல கோபமாக கத்தினார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

அதோடு இன்னும் கோபமாக கோலி பயன்படுத்தும் கெட்ட வார்த்தையை ஒன்றையும் கூறி திட்டினார். நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே மிக மோசமாக ஆடியது. மும்பை வீரர்கள் டென்ஷன் இல்லாமல் கூலாக ஆடி இருக்க வேண்டும். ஆனாலும் குர்ணால் பாண்டியா அப்படி ஆடவில்லை. அதேபோல் சேசிங்கின் போதும் மும்பையின் ஒப்பனர்கள் மிகவும் சீரியஸாக இருந்தனர்.

குறிக்கோள்

குறிக்கோள்

போட்டியை வேகமாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தனர். மும்பை அணி நேற்று ஒவ்வொரு ரன்னையும் மிகவும் கவனமாக எடுத்தது. அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதில் மும்பை குறிக்கோளாக இருந்தது. இதனால்தான் நேற்று ஒரு பவுண்டரி சென்றதற்கே குர்ணால் பாண்டியா கோபம் அடைந்துள்ளார் என்கிறார்கள்.

Story first published: Saturday, October 24, 2020, 12:37 [IST]
Other articles published on Oct 24, 2020
English summary
IPL 2020: Krunal Pandya was so keen on not giving boundaries to CSK .
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+